SIR GARFIELD TROPHY AWARD FOR CRICKETER OF YEAR 2024
2024 ஆம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான சர் கார்பீல்ட் டிரோபி விருது
TAMIL
SIR GARFIELD TROPHY AWARD FOR CRICKETER OF YEAR 2024 / 2024 ஆம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான சர் கார்பீல்ட் டிரோபி விருது: 2024-ம் ஆண்டு கிரிக்கெட்டில் தலைசிறந்த செயல்திறனை வெளிப்படுத்திய கிரிக்கெட் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு விருதுகளை வழங்கிவருகிறது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி.அந்தவகையில் சிறந்த டெஸ்ட், ஒடிஐ மற்றும் டி20 கிரிக்கெட் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கான விருதுகள், வளர்ந்துவரும் வீரர்களுக்கான விருதுகள், துணை வீரர்களுக்கான விருதுகள் மற்றும் ஆண்டின் சிறந்த அம்பயர் முதலிய விருதுகளை அறிவித்துவருகிறது.
இந்நிலையில் இந்திய அணியிலிருந்து சிறந்த டி20 ஆண்கள் கிரிக்கெட்டராக அர்ஷ்தீப் சிங்கும், சிறந்த டெஸ்ட் கிரிக்கெட்டராக ஜஸ்பிரித் பும்ராவும், சிறந்த ஒருநாள் பெண்கள் கிரிக்கெட்டராக ஸ்மிரிதி மந்தனாவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து இன்று வெளியிடப்பட்டிருக்கும் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருது ஜஸ்பிரித் பும்ராவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐசிசியின் சிறந்த விருதாக பார்க்கப்படும் ஒரு ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான சர் கார்பீல்ட் டிரோபியை 2024-ம் ஆண்டுக்காக பும்ரா வென்றுள்ளார். இந்த விருதை இதுவரை 4 இந்திய வீரர்கள் மட்டுமே வென்றுள்ளனர்.
முதல்முதலில் சர் கார்பீல்ட் டிரோபியை வென்றவர் ராகுல்டிராவிட் 2004-ம் ஆண்டு வென்றார். அதற்குபிறகு சச்சின் டெண்டுல்கர் 2010-ம் ஆண்டும், ரவிச்சந்திரன் அஸ்வின் 2016-ம் ஆண்டும், விராட் கோலி 2017 மற்றும் 2018 என இரண்டு வருடங்களில் வென்றிருந்தார்.
இந்த சாம்பியன் கிரிக்கெட்டர்களான 4 வீரர்களுக்கு பிறகு ஐந்தாவது இந்திய வீரராக ஜஸ்பிரித் பும்ரா 'சர் கார்பீல்ட் டிரோபி' வென்று மகுடம் சூடியுள்ளார்.
ENGLISH
SIR GARFIELD TROPHY AWARD FOR CRICKETER OF YEAR 2024: The International Cricket Council (ICC) is giving away awards to cricketers and players who have shown outstanding performance in cricket in 2024.
In this situation, Arshdeep Singh has been selected as the best T20 men's cricketer from the Indian team, Jasprit Bumrah as the best Test cricketer, and Smriti Mandhana as the best ODI women's cricketer.
Following this, the Cricketer of the Year award, which was announced today, has been announced for Jasprit Bumrah. Bumrah has won the Sir Garfield Trophy for the year 2024, which is considered the best award of the ICC. Only 4 Indian players have won this award so far.
The first Sir Garfield Trophy winner was Rahul Dravid in 2004. After that, Sachin Tendulkar won it in 2010, Ravichandran Ashwin in 2016, and Virat Kohli won it in two years, 2017 and 2018. Jasprit Bumrah has become the fifth Indian player to win the 'Sir Garfield Trophy' after these 4 champion cricketers.
0 Comments