Recent Post

6/recent/ticker-posts

TAMILNADU 76th REPUBLIC DAY AWARD 2025 / தமிழ்நாடு 76வது குடியரசு தின விருதுகள் 2025

TAMILNADU 76th REPUBLIC DAY AWARD 2025
தமிழ்நாடு 76வது குடியரசு தின விருதுகள் 2025

TAMILNADU 76th REPUBLIC DAY AWARD 2025 / தமிழ்நாடு 76வது குடியரசு தின விருதுகள் 2025

TAMIL

TAMILNADU 76th REPUBLIC DAY AWARD 2025 / தமிழ்நாடு 76வது குடியரசு தின விருதுகள் 2025: குடியரசு தின விழாவில் வீர தீர செயலுக்கான அண்ணா பதங்கங்களை வழங்கினார். தீயணைப்புத்துறையைச் சேர்ந்த வெற்றிவேலுக்கு வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம் வழங்கப்பட்டது.

குடியரசு தினத்தை ஒட்டி ராமநாதபுரத்தைச் சேர்ந்த அமீர் அம்ஷா என்பவருக்கு கோட்டை அமீர் மத நல்லிணக்க விருது முதல்வர் வழங்கினார். எஸ்.ஏ. அமீர் அம்ஷாவுக்கு மத நல்லிணக்க விருதுடன் ரூ.5 லட்சத்துக்கான காசோலையை முதல்வர் வழங்கினார்.

வெளிப்பட்டினத்தைச் சேர்ந்த எஸ்.ஏ.அமீர் அம்ஷா மத நல்லிணத்துக்காக பல்வேறு பணிகளை ஆற்றி வருகிறார். இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆதரவற்றவர்களின் பிரேதங்களை இலவசமாக நல்லடக்கம் செய்துள்ளார். கொரோனா காலத்தில் சுமார் 200 பிரேதங்களை நல்லடக்கம் செய்துள்ளார் எஸ்.ஏ.அமீர் அம்ஷா. கொரோனாவால் பாதிக்கப்பட்ட சுமார் 700 பேருக்கு தேவையான உதவிகளைச் செய்துள்ளார்.

தேனியைச் சேர்ந்த ரா.முருகவேலுக்கு சி.நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருது வழங்கப்பட்டது. மாநில அளவில் திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பங்களை கண்டுபிடித்து அதிக உற்பத்தி தரும் விவசாயிகளுக்கு விருது வழங்கப்பட்டது. நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி திருந்திய நெல் சாகுபடி மூலம் ஹெக்டேருக்கு 10,815 கிலோ மகசூல் கிடைத்துள்ளது.

சிறந்த காவல் நிலையங்களுக்கான பரிசுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். சிறந்த காவல் நிலையத்துக்கான முதலமைச்சர் விருது மதுரை மாநகர காவல் நிலையத்துக்கு வழங்கினார் முதலமைச்சர். சிறந்த காவல் நிலையத்துக்கான முதலமைச்சர் விருது மதுரை மாநகர காவல் நிலையத்துக்கு வழங்கப்பட்டது. திருப்பூர் மாநகர காவல் நிலையத்துக்கு 2ம் பரிசு, திருவள்ளூர் மாவட்ட காவல் நிலையத்துக்கு 3ம் பரிசு வழங்கப்பட்டது.

5 காவலர்களுக்கு கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்தியதில் மெச்சத்தக்க வகையில் பணிபுரிந்ததற்காக காந்தியடிகள் காவலர் பதக்கம் வழங்கப்படுகிறது. விழுப்புரம் மண்டல மத்திய நுண்ணறிவு பிரிவு காவல் ஆய்வாளர் பெ.சின்னகாமன். விழுப்புரம் தாலுகா சட்டம்-ஒழுங்கு தலைமைக் காவலர் கி.மகாமார்க்ஸ், துறையூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு தலைமைக் காவலர் க.கார்த்திக், சேலம் ஆயுதப்படை இரண்டாம் நிலைக் காவலர் கா.சிவா, சேலம் ஆயுதப்படை இரண்டாம் நிலைக் காவலர் ப.பூமாலைக்கு காந்தியடிகள் காவலர் பதக்கம் வழங்கப்பட்டது.

ENGLISH

TAMILNADU 76th REPUBLIC DAY AWARD 2025: Anna Padangams were awarded for bravery on the Republic Day. Vetrivel from the fire department was awarded the Anna Padangam for bravery.

On the occasion of Republic Day, the Chief Minister presented the Kottayam Ameer Religious Harmony Award to Ameer Amsha from Ramanathapuram. The Chief Minister presented a cheque of Rs. 5 lakh along with the Religious Harmony Award to S.A. Ameer Amsha.

S.A. Ameer Amsha from Velipattinam is doing various works for religious harmony. So far, he has buried the bodies of more than a thousand destitute people free of cost. S.A. Ameer Amsha has buried about 200 bodies during the Corona period. He has provided necessary assistance to about 700 people affected by Corona.

Ra. Murugavel from Theni was awarded the C. Narayanasamy Naidu Paddy Production Efficiency Award. The award was given to farmers who discovered innovative paddy cultivation technologies at the state level and produced high yields. The yield of paddy cultivation in Thirundiya using modern technologies has reached 10,815 kg per hectare.

Chief Minister M.K. Stalin presented prizes to the best police stations. The Chief Minister presented the Chief Minister's Award for the Best Police Station to the Madurai City Police Station. The Chief Minister's Award for the Best Police Station was given to the Madurai City Police Station. The Tiruppur City Police Station was awarded the 2nd prize and the Tiruvallur District Police Station was awarded the 3rd prize.

5 police officers are awarded the Gandhiadigal Police Medal for their commendable work in controlling bootleg liquor. Villupuram Zone Central Intelligence Unit Police Inspector P. Chinnagaman. Villupuram Taluk Law and Order Chief Constable K. Mahamarks, Thuraiyur Prohibition Enforcement Division Chief Constable K. Karthik, Salem Armed Forces Second Class Constable K. Siva, and Salem Armed Forces Second Class Constable P. Poomalai were awarded the Gandhiadigal Constable Medal.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel