Recent Post

6/recent/ticker-posts

தேசிய மஞ்சள் வாரியத்தை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தொடங்கி வைத்தார் / Union Minister Piyush Goyal inaugurated the National Turmeric Board

தேசிய மஞ்சள் வாரியத்தை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தொடங்கி வைத்தார் / Union Minister Piyush Goyal inaugurated the National Turmeric Board

இந்தியாவில் 30 வகையான மஞ்சள் உற்பத்தி செய்யப்படுவதாக கூறப்படுகிறது. உலகளாவிய மஞ்சள் உற்பத்தியில் இந்தியா 70% க்கும் அதிகமாகப் பங்களித்ததாக சொல்லப்படுகிறது.

மகாராஷ்டிரா, மகாராஷ்டிரா, தெலங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் உள்ள விவசாயிகள் பெருமளவில் மஞ்சள் உற்பத்தி செய்கின்றனா்.

கொரோனா தொற்றுக்குப் பிறகு மஞ்சளின் பலன்கள் குறித்த விழிப்புணா்வு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சூழலில், மஞ்சள் விவசாயிகளின் தேவைகள் மற்றும் எதிா்கால வாய்ப்புகளைக் கருத்தில்கொண்டு தேசிய மஞ்சள் வாரியம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கடந்த 2023ம் ஆண்டு பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், தேசிய மஞ்சள் வாரியத்தை மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் இன்று டெல்லியில் தொடங்கி வைத்தார். பல்லே கங்கா ரெட்டி இந்த வாரியத்தின் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார். மஞ்சள் வாரியத்தின் தலைமையகம் நிஜாமாபாத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மஞ்சள் வாரியம் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், மேகாலயா உள்ளிட்ட 20 மாநிலங்களில் பரவியுள்ள மஞ்சள் விவசாயிகளின் நலனில் சிறப்பு கவனம் செலுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஞ்சள் வாரியம் அமைக்கப்பட்டிருப்பது நாட்டில் மஞ்சள் உற்பத்தியாளர்களின் வருமானத்தை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel