இஸ்ரோ தலைவர் சோம்நாத் பதவிக் காலம் நிறைவடைய உள்ள நிலையில், புதிய தலைவராக நாராயணனை மத்திய அரசின் நியமனக் குழு தேர்வு செய்துள்ளது.
அதன்படி, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த வி. நாராயணன், திருவனந்தபுரத்தின் வலியமலாவில் உள்ள எல்.பி.எஸ்.சி.யின் இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
வரும் 14ஆம் தேதி இஸ்ரோவின் தலைவராக நாராயணன் பொறுப்பேற்க உள்ளார். தொடர்ந்து 2 ஆண்டுகள் இஸ்ரோ தலைவராக அவர் பதவியில் தொடர்வார் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
0 Comments