Recent Post

6/recent/ticker-posts

வெம்பக்கோட்டை அகழாய்வு - கலைநயமிக்க அணிகலன்கள் கண்டெடுப்பு / Vembakkottai excavations - discovery of artistic ornaments

வெம்பக்கோட்டை அகழாய்வு - கலைநயமிக்க அணிகலன்கள் கண்டெடுப்பு / Vembakkottai excavations - discovery of artistic ornaments

விருதுநகர் மாவட்டம் வெம்பகோட்டை அருகே விஜயகரிசல்குளம், மேட்டுகாடு பகுதியில் 3ம் கட்ட அகழாய்வு கடந்த ஜூன் 18-ம் தேதி முதல் நடைபெற்று வந்தது.

அகழாய்வில் இதுவரை சூது பவள மணிகள், தங்க நாணயம், செப்பு காசுகள், உடைந்த நிலையிலுள்ள சூடு மண் உருவ பொம்மை, சதுரங்க ஆட்ட காய்கள், கண்ணாடி மணிகள், வட்ட சில்லு, சங்கு, வளையல்கள் உள்ளிட்ட 3000-க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் தற்போது தோண்டப்பட்ட அகழாய்வு குழியில் சங்கு வளையல், பெண்கள் அணிகலனாக பயன்படுத்திய படிகக்கல் மணி, சில்லுவட்டு ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

இதன் மூலம் முன்னோர்கள் கலைநயமிக்க அணிகலன்களை பயன்படுத்தியுள்ளது தெரிய வருவதாக தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel