Recent Post

6/recent/ticker-posts

தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் இந்திய ராணுவத்தின் துப்பாக்கிச் சுடும் திறனை மேம்படுத்த ரூ.10,147 கோடி மதிப்பீட்டில் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம் / Defence Ministry signs Rs 10,147 crore deal to improve Indian Army's shooting capabilities under Atma Sarkar Bharat Mission

பலவகையான ராக்கெட்டு ஏவும் அமைப்புகளை கொள்முதல் செய்வதற்காக, எகனாமிக் எக்ஸ்ப்ளோசிவ் லிமிடெட் (இஇஎல்) மற்றும் முனிஷன்ஸ் இந்தியா லிமிடெட் (எம்ஐஎல்) ஆகியவற்றுடன் பாதுகாப்பு அமைச்சகம், மொத்தம் ரூ.10,147 கோடி மதிப்பீட்டிலான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.

மேலும் சக்தி மென்பொருள் மேம்பாட்டிற்கு பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (பிஇஎல்) நிறுவனத்துடனும் ஒப்பந்தம் கையெழுத்தானது. புது தில்லியில் பாதுகாப்பு செயலாளர் ஸ்ரீ ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில் இந்த ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

துல்லியமான மற்றும் நீண்ட தூர தாக்குதல்களை செயல்படுத்த, இந்திய ராணுவத்தின் துப்பாக்கிச் சுடுதல் திறனை வலுப்படுத்துவதில் இந்த ஒப்பந்தங்கள் முக்கிய பங்கு வகிக்கும்.

தேசிய பாதுகாப்புத் திறனை மேம்படுத்துவதுடன், இந்தத் திட்டங்கள் இந்திய சிறு குறு நடுத்தர தொழில்களை ஊக்குவிக்கும். நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.

இந்தியாவின் பாதுகாப்பு உள்கட்டமைப்பை நவீனமயமாக்குவதற்கும், உள்நாட்டுத் தொழில்களை மேம்படுத்துவதற்கும் இந்தக் கொள்முதல் ஒரு முக்கிய படியாகும்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel