Recent Post

6/recent/ticker-posts

டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2025 / DELHI STATE ASSEMBLY ELECTION RESULT 2025

டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2025 / DELHI STATE ASSEMBLY ELECTION RESULT 2025

70 தொகுதிகளை கொண்ட நாட்டின் தலைநகரான டெல்லி சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக கடந்த ஐந்தாம் தேதி நடந்து முடிந்தது. இந்நிலையில், இதன் வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது.

வாக்கு எண்ணும் பணியில் 5000 பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 19 மையங்களில் வாக்கு எண்ணிக்கையானது நடைபெற்று வருகிறது. முதலில் தபால் வாக்குகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, அதைத்தொடர்ந்து மின்னனு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன.

இந்த சூழலில் வாக்கு எண்ணிக்கை இறுதிக்கட்டத்தில் இருக்கும் நிலையில், ஆட்சியில் இருந்த ஆம் ஆத்மியின் நட்சத்திர வேட்பாளர்கள் அனைவரும் பின்னடைவை சந்தித்துள்ளனர். 40 தொகுதிகளுக்கும் மேல் முன்னிலை பெற்று 27 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியில் ஆட்சியைபிடிக்கவிருக்கிறது பாஜக கட்சி.

முன்னாள் முதல்வராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால், புது டெல்லி தொகுதியில் பாஜக வேட்பாளர் பர்வேஷ் வர்மாவிடம் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளார். அதேபோல மணீஷ் சிசோடியாவும் ஜங்புரா தொகுதியில் தோல்வியை சந்தித்துள்ளார்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel