இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) ஆறு உறுப்பினர்களைக் கொண்ட நாணயக் கொள்கைக் குழு (MPC) வெள்ளிக்கிழமை ரெப்போ விகிதத்தை அதாவது மற்ற வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடன் விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் குறைத்து 6.25 சதவீதமாக குறைத்துள்ளது.
ரெப்போ விகிதத்தை கடந்த இரண்டு ஆண்டுகளாக ரிசர்வ் வங்கி மாற்றாமல் வைத்திருந்த நிலையில் தற்போதைய குறைப்பு வந்துள்ளது.
ஐந்து ஆண்டுகளில் ரிசர்வ் வங்கியால் தொடங்கப்பட்ட முதல் வட்டி விகிதக் குறைப்பு இதுவாகும், கடைசியாக 2020 மே மாதம் குறைக்கப்பட்டது.
ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை குறைக்கும் போது, ரெப்போ விகிதத்துடன் இணைக்கப்பட்ட அனைத்து வெளிப்புற பெஞ்ச்மார்க் கடன் விகிதங்களும் (EBLR) குறையும், கடனாளிகளுக்கு அவர்களின் மாதாந்திர தவணைகள் (EMI) குறையும்.
0 Comments