REPORT OF CASTE CENSUS IN TELANGANA
தெலுங்கானாவில் சாதிவாரி கணக்கெடுப்பு முடிவுகள்
TAMIL
REPORT OF CASTE CENSUS IN TELANGANA / தெலுங்கானாவில் சாதிவாரி கணக்கெடுப்பு முடிவுகள்: காங்கிரஸ் கட்சி அளித்த தேர்தல் வாக்குறுதியின் அடிப்படையில் பீகார் மற்றும் காங்கிரஸ் ஆளும் கர்நாடக மாநிலத்திற்குப் பிறகு தெலுங்கானாவில் தற்போது சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
தெலங்கானாவில்கடந்த ஆண்டு நவம்பர் 6ம் தேதி தொடங்கிய சாதிவாரி கணக்கெடுப்பு பணிகள் 50 நாட்கள் நடைபெற்றது.
அப்போது தெலுங்கானாவில் 3,54,77,554 பேர் மற்றும் 1,12,15,134 குடும்பங்களிடம் வீடு வீடாகச் சென்று சமூக-பொருளாதார, கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் மற்றும் சாதி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அதன் புள்ளிவிவரங்கள் மாநில அரசால் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி தெலங்கானா மக்கள் தொகையில் மொத்தம் 56.33% பேர் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என சாதிவாரி கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
மேலும் அவர்களில் முஸ்லிம் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 10.08% பேரும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 46.25% பேரும் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு அடுத்தபடியாக பட்டியல் சமூகத்தினர் 17.43% பேரும் பழங்குடியினர் 10.45% பேரும் உள்ளனர் என்று சாதி கணக்கெடுப்பு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதேபோல தெலுங்கானாவின் மொத்த மக்கள் தொகையில் முற்பட்ட வகுப்பினர் (OC) 13.31% பெரும் முஸ்லிம்களில் முற்பட்ட வகுப்பினர் 2.48% பெரும் உள்ளது என்றும் அம்மாநிலத்தில் மொத்தமாக 50.51% ஆண்கள் மற்றும் 49.45% பெண்கள் உள்ளனர் என்று கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
ENGLISH
REPORT OF CASTE CENSUS IN TELANGANA: Based on the election promise made by the Congress party, after Bihar and Congress-ruled Karnataka, a caste-wise census has now been conducted in Telangana and the results have been announced.
The caste-wise census in Telangana, which began on November 6 last year, was held for 50 days. At that time, a socio-economic, educational, employment, political and caste census was conducted on 3,54,77,554 people and 1,12,15,134 families in Telangana and its statistics have been released by the state government.
Accordingly, the caste-wise census has revealed that a total of 56.33% of the population of Telangana belongs to the backward community. It has also been reported that 10.08% of them are Muslim backward classes and 46.25% are other backward classes.
The caste census results show that Scheduled Castes constitute 17.43% of the total population of Telangana, followed by Scheduled Tribes (10.45%). Similarly, the census revealed that the total population of Telangana is 13.31% of the total population of Telangana, while the total population of Muslims is 2.48%. The total population of the state is 50.51% male and 49.45% female.
0 Comments