Recent Post

6/recent/ticker-posts

REPORT ON NUMBER OF ABORTION IN INDIA / இந்தியாவில் கருக்கலைப்பு எண்ணிக்கை குறித்த தரவு

REPORT ON NUMBER OF ABORTION IN INDIA
இந்தியாவில் கருக்கலைப்பு எண்ணிக்கை குறித்த தரவு

REPORT ON NUMBER OF ABORTION IN INDIA / இந்தியாவில் கருக்கலைப்பு எண்ணிக்கை குறித்த தரவு

TAMIL

REPORT ON NUMBER OF ABORTION IN INDIA / இந்தியாவில் கருக்கலைப்பு எண்ணிக்கை குறித்த தரவு: இந்தியாவில் கருக்கலைப்பு செய்து கொள்ளும் பெண்களின் எண்ணிக்கை தொடர்ந்து பல ஆண்டுகளாக படிப்படியாக அதிகரித்து வருகின்றது.

முந்தைய ஆண்டுகளின் தரவுகள் குறிப்பாக மெடிக்கல் அபார்ஷன்களில் அதாவது கருக்கலைப்பு மருந்துகள் மூலம் செய்து கருக்கலைப்பு செய்வது அதிகரித்து வருகிறது.

இதன் மூலம் பல பெண்கள் கருக்கலைப்பிற்காக மருத்துவமனைகளுக்கு செல்லாமல் வீட்டிலேயே இதற்கான நடைமுறைகளை மேற்கொள்வதை தேர்ந்தெடுத்துள்ளது தெரிய வந்துள்ளது. 2023-ஆம் ஆண்டிலேயே, நாடு முழுவதும் சுமார் 11 லட்சத்திற்கும் மேற்பட்ட கருக்கலைப்பு நிகழ்வுகள் பதிவாகியுள்ளன.

மாநிலங்களவையில் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வழங்கி இருக்கும் புள்ளிவிவரங்களின்படி, மகாராஷ்டிரா 1.8 லட்சம் கருக்கலைப்பு நிகழ்வுகளுடன் முதலிடத்திலும், தமிழ்நாடு 1.14 லட்சம் கருக்கலைப்பு நிகழ்வுகளுடன் இரண்டாவது இடத்திலும், மேற்கு வங்கம் 1.08 லட்சம் கருக்கலைப்பு நிகழ்வுகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.

எனினும் இந்த எண்ணிக்கை எதிர்பாராமல் நிகழ்ந்த கருச்சிதைவு மற்றும் தானாக முன்வந்து செய்யப்பட்ட கருக்கலைப்பு இரண்டையும் உள்ளடக்கியவை.

இந்த பட்டியலில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடம் இருக்க அங்கு இருக்கும் அதிக மக்கள் தொகை மற்றும் எளிதில் அணுகக்கூடிய சுகாதார உள்கட்டமைப்பு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. 

சில மாநிலங்கள் அதிக கருக்கலைப்பு நிகழ்வுகளை பதிவு செய்திருக்கும் போதிலும், சில மாநிலங்கள் இதற்கு நேர்மாறாக குறைவான கருக்கலைப்பு விகிதங்களை பதிவு செய்துள்ளன. 

அந்த வகையில் அருணாச்சலப் பிரதேசம், சண்டிகர், உத்தரகண்ட் மற்றும் இமாச்சலப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான கருக்கலைப்பு சம்பவங்களே பதிவு செய்யப்பட்டு உள்ளன.


2015-ஆம் ஆண்டு கருக்கலைப்பு எண்ணிக்கை குறித்த தரவு

REPORT ON NUMBER OF ABORTION IN INDIA / இந்தியாவில் கருக்கலைப்பு எண்ணிக்கை குறித்த தரவு: ஐக்கிய நாடுகள் மக்கள்தொகை நிதியத்தின் (UNFPA) 2015-ஆம் ஆண்டு அறிக்கையின்படி, 2007 மற்றும் 2011-ஆம் ஆண்டுகளுக்கு இடையே இந்தியாவில் செய்யப்பட்ட கருக்கலைப்புகளில் 67% பாதுகாப்பற்றவை என வகைப்படுத்தப்பட்டுள்ளன. 

இது மாநிலங்களை பொறுத்து 45% முதல் 78% வரை வேறுபட்டது. குறிப்பாக மருத்துவ வசதிகள் குறைவாக உள்ள பகுதிகளில் அதிகம் பதிவாகி இருக்கும் பாதுகாப்பற்ற கருக்கலைப்புகள் ஒரு முக்கிய கவலையாக பார்க்கப்படுகிறது.

'தி லான்செட் குளோபல் ஹெல்த்' அறிக்கையின்படி, 2015-ஆம் ஆண்டில் இந்தியாவில் மொத்தம் 15.6 மில்லியன் கருக்கலைப்புகள் நடந்துள்ளன. இந்த எண்ணிக்கை அரசால் கூறப்பட்ட ஆண்டு எண்ணிக்கையான 7 லட்சத்தை விட மிக அதிகம். 

ய்வின்படி, 81% (12.7 மில்லியன்) பெண்கள் மருந்துகள் மூலம் கருக்கலைப்பு செய்துள்ளார்கள். இதற்கு அடுத்தப்படியாக சுமார்14% பெண்கள் அறுவை சிகிச்சை மூலம் கருக்கலைப்பு செய்துள்ள அதேசமயம், 5% பாதுகாப்பற்ற முறைகளைப் பயன்படுத்தி கருக்கலைப்பு செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.


2015 - 2019 ஆண்டுகளுக்கு இடையிலான மாற்றம்

REPORT ON NUMBER OF ABORTION IN INDIA / இந்தியாவில் கருக்கலைப்பு எண்ணிக்கை குறித்த தரவு: குட்மேக்கர் நிறுவனம் நடத்திய பகுப்பாய்வில், 2015-2019 ஆண்டுகளுக்கு இடையில் இந்தியாவில் ஆண்டுதோறும் சராசரியாக 48.5 மில்லியன் (48.5 மில்லியன்) கர்ப்பங்கள் நிகழ்ந்தது கண்டறியப்பட்டுள்ளது. 

இவற்றில், 21.5 மில்லியன் கர்ப்பங்கள் திட்டமிடப்படாதவை மற்றும் 16.6 மில்லியன் கர்ப்பங்கள் இறுதியாக கருக்கலைப்பு செய்யப்பட்டன. இது 1990-1994 ஆண்களுடன் இதனை ஒப்பிதட்டால் நாட்டில் கருக்கலைப்பு விகிதம் 23% அதிகரித்துள்ளது.

குறிப்பாக 2000-2004 ஆண்டுகளுக்கு பிறகு, இது 37% அதிகரித்துள்ளது. இதனிடையே கருக்கலைப்புகளில் அடங்கிய திட்டமிடப்படாத கர்ப்ப நிகழ்வுகளில் விகிதமும் 47%-லிருந்து 77%-ஆக உயர்ந்தது.


ENGLISH

REPORT ON NUMBER OF ABORTION IN INDIA: The number of women undergoing abortions in India has been steadily increasing for several years. Data from previous years has shown that there has been an increase in the number of medical abortions, i.e. abortions performed using abortion pills.

This has led to many women opting to undergo the procedure at home rather than going to hospitals for abortions. In 2023 alone, more than 11 lakh abortions were reported across the country.

According to the statistics provided by the Ministry of Health and Family Welfare in the Rajya Sabha, Maharashtra ranks first with 1.8 lakh abortions, Tamil Nadu is second with 1.14 lakh abortions, and West Bengal is third with 1.08 lakh abortions. However, this figure includes both unplanned and voluntary abortions.

It is said that Maharashtra's top position in this list may be due to its large population and easily accessible healthcare infrastructure. While some states have recorded high abortion rates, others have recorded low rates. States like Arunachal Pradesh, Chandigarh, Uttarakhand and Himachal Pradesh have recorded the lowest number of abortions.


Data on abortion rates in 2015

REPORT ON NUMBER OF ABORTION IN INDIA: According to a 2015 report by the United Nations Population Fund (UNFPA), 67% of abortions performed in India between 2007 and 2011 were classified as unsafe, varying from 45% to 78% across states. Unsafe abortions are a major concern, especially in areas with poor health facilities.

According to a report by 'The Lancet Global Health', a total of 15.6 million abortions were performed in India in 2015. This number is much higher than the government’s annual figure of 7 lakh. 

According to the study, 81% (12.7 million) of women had abortions using medication. This was followed by about 14% of women who had abortions through surgery, while 5% were reported to have had abortions using unsafe methods.


Change between 2015 and 2019

REPORT ON NUMBER OF ABORTION IN INDIA: A study conducted by the Guttmacher Institute found that an average of 48.5 million (48.5 million) pregnancies occurred annually in India between 2015 and 2019. 

Of these, 21.5 million pregnancies were unplanned and 16.6 million pregnancies were ultimately terminated. This represents a 23% increase in the abortion rate in the country compared to 1990-1994.

It has increased by 37% since 2000-2004. Meanwhile, the rate of unplanned pregnancies, including abortions, also rose from 47% to 77%.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel