Recent Post

6/recent/ticker-posts

பொற்பனைக்கோட்டை அகழாய்வில் சிறிய அளவு தங்கம், எலும்புமுனை கருவி கண்டெடுப்பு / Small amount of gold, bone-pointed tool discovered in excavations at Porpanaikottai

பொற்பனைக்கோட்டை அகழாய்வில் சிறிய அளவு தங்கம், எலும்புமுனை கருவி கண்டெடுப்பு / Small amount of gold, bone-pointed tool discovered in excavations at Porpanaikottai

புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் தமிழக தொல்லியல் துறை சார்பில், இயக்குநர் தங்கதுரை தலைமையில் அகழாய்வுப் பணி நடைபெற்று வருகிறது.

முதற்கட்ட அகழாய்வு முடிவடைந்த நிலையில், கடந்த ஆண்டு ஜூன் 18-ம் தேதி முதல் 2-ம் கட்ட அகழாய்வு நடைபெற்று வருகிறது.

வடகிழக்குப் பருவமழையால் அகழாய்வு நிறுத்தப்பட்டிருந்த நிலையில், ஜன. 20ம் தேதி முதல் 7 இடங்களில் மீண்டும் அகழாய்வுப் பணி நடைபெற்று வருகிறது. அதில், ஒரு குழியில் 196 செ.மீ. ஆழத்தில் எலும்புமுனைக் கருவி கண்டெடுக்கப்பட்டது.

அந்தக் கருவி 7.8 கிராம் எடையில், 7.4 செ.மீ. நீளம், 1 செ.மீ. விட்டம் கொண்டுள்ளது. மற்றொரு குழியில் உடைந்த நிலையில் தங்கத்தின் சிறு பகுதி கண்டெடுக்கப்பட்டுள்ளது.

2-ம் கட்ட அகழாய்வில் இதுவரை கண்ணாடி மணிகள், வளையல்கள், இரும்பு ஆணி, குளவிக்கல், சூதுபவள மணி உள்ளிட்ட 1,743 தொல்பொருட்கள் கிடைத்துள்ளதாக அகழாய்வுத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel