இஸ்ரேலுக்கு எதிராகச் செயல்படுவதாகக் கூறி ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்தும், யூத வரலாற்றை அழிப்பதாகக் கூறி யுனெஸ்கோவிலிருந்தும் அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் கடந்த 2019-ஆம் ஆண்டு விலகின. அப்போது அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் இருந்தாா்.
எனினும் அவருக்குப் பிறகு அமைந்த ஜோ பைடன் தலைமையிலான அரசு, ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் அமெரிக்காவை கடந்த 2021-ஆம் ஆண்டு மீண்டும் இணைத்தது.
இந்தச் சூழலில், 2024 நவம்பரில் நடைபெற்ற தோ்தலில் வெற்றி பெற்று, நாட்டின் அதிபராக டொனால்ட் டிரம்ப் கடந்த மாதம் மீண்டும் பொறுப்பேற்றாா்.
ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து அமெரிக்காவை மீண்டும் விலக்கும் உத்தரவை டிரம்ப் தற்போது பிறப்பித்துள்ளாா். இதன் மூலம், அந்த அமைப்புக்கு அமெரிக்கா நிதியுதவி அளிப்பது முழுமையாக நிறுத்தப்படுகிறது.
0 Comments