தமிழ்நாட்டில் மக்காச்சோளப்பயிர் சராசரியாக 4 லட்சம் ஹெக்டேரில் பயிரிடப்பட்டு 29 லட்சம் மெட்ரிக் டன் மக்காச்சோளம் உற்பத்தி செய்யப்படுகிறது.
மக்காச்சோளம் பெரும்பாலும் தீவனத்தயாரிப்புக்காக கொள்முதல் செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது எத்தனால் உற்பத்தி தொழிற்சாலைகளில் மூலப்பொருளாக அதன் தேவை பெரிதும் அதிகரித்துள்ளது. இதனால், தமிழ்நாடு அரசால் மக்காச்சோள சாகுபடி பெருமளவில் விவசாயிகளிடையே ஊக்குவிக்கப்பட்டு வருகிறது.
இதனைத்தொடர்ந்து விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து வரப்பெற்ற கருத்துகளை ஆராய்ந்து அதற்கேற்ப 1987-ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண் விளைபொருள் சந்தை (முறைப்படுத்துதல்) சட்டம் பிரிவு 9(1)(d)ன் படி வெளியிடப்பட்ட வேளாண் விளைபொருளான மக்காச்சோளத்திற்கான அறிவிக்கை தமிழ்நாட்டின் அனைத்து விற்பனைக்குழு பகுதிகளிலும் ரத்து செய்யப்படுகிறது.
தமிழ்நாட்டில் மக்காச்சோள வர்த்தகம் மேற்கொள்ள தற்போதுள்ள ஒரு சதவீத சந்தைக்கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்படுகிறது.
0 Comments