எட்டாவது ஏவுகணை மற்றும் வெடிமருந்து பொருட்கள் படகு ஒப்படைக்கும் விழா, எல்எஸ்ஏஎம் 11 (யார்டு 79) மும்பை கடற்படை கப்பல்கட்டும் துறையில் 2025, மார்ச் 07 அன்று நடைபெற்றது.
விழாவிற்கு தலைமை விருந்தினராக கமாண்டர் ராஜேஷ் பர்கோட்டி பங்கேற்றார். இத்துடன், எம்எஸ்எம்இ கப்பல்கட்டும் துறை எட்டு படகுகளையும் இந்திய கடற்படைக்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்குவதை நிறைவு செய்தது.
எட்டு ஏவுகணை மற்றும் வெடிமருந்து பொருட்கள் படகுகளை கட்டமைத்து வழங்க, விசாகப்பட்டினத்தில் உள்ள ஸீக்கான் பொறியியல் திட்டங்கள் பிரைவேட் லிமிடெட் என்ற எம்எஸ்எம்இ கப்பல் கட்டும் தளத்துடன் 2021, பிப்ரவரி 19 அன்று ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது.
இந்தப் படகுகள் இந்திய கப்பல் வடிவமைப்பு நிறுவனத்துடன் இணைந்து கப்பல் கட்டும் தளத்தால் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு, அவற்றின் கடல்சார் தகுதியை உறுதி செய்வதற்காக விசாகப்பட்டினத்தில் உள்ள கடற்படை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வகத்தில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளன.
இந்திய கப்பல் பதிவுடன் தொடர்புடைய கடற்படை விதிமுறைகளின்படி படகுகள் கட்டப்பட்டுள்ளன. ஏவுகணை மற்றும் வெடிமருந்து பொருட்கள் படகுகள் மத்திய அரசின் இந்தியாவில் உற்பத்தி மற்றும் தற்சார்பு இந்தியா முயற்சிகளின் பெருமைமிக்க கொடியை ஏந்தியவை. இவை எம்எஸ்எம்இ-களை ஊக்குவிப்பதற்கான இந்திய கடற்படையின் உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுகின்றன.
இந்தப் படகுகளில் ஏழு ஏற்கனவே ஒப்படைக்கப்பட்டுள்ளன. அவை ஜெட்டிகள் மற்றும் வெளிப்புற துறைமுகங்களில் இந்தியக் கடற்படை தளங்களுக்கு பொருட்கள்/ வெடிமருந்துகளை கொண்டு செல்வது, ஏற்றுதல், இறக்குதல் ஆகியவற்றை எளிதாக்குவதன் மூலம் இந்தியக் கடற்படையின் செயற்பாடுகளுக்கு உத்வேகம் அளிக்கின்றன.
0 Comments