கோவா ஷிப்யார்ட் லிமிடெட் (ஜிஎஸ்எல்) கட்டிய 'தவஸ்யா' என்று பெயரிடப்பட்ட திட்டம் 1135.6 கூடுதல் வரிசைக் கப்பல்களின் இரண்டாவது போர்க்கப்பல், பாதுகாப்புத் துறை இணையமைச்சர் திரு சஞ்சய் சேத் முன்னிலையில் இன்று (மார்ச் 22, 2025) அன்று கோவாவில் உள்ள ஜிஎஸ்எல் தளத்தில் அறிமுகம் செய்து பயன்பாட்டுக்குத் தொடங்கி வைக்கப்பட்டது.
இந்த போர்க்கப்பல்கள் பி1135.6 கப்பல்களின் தொடர் வரிசையாகும். இவை இப்போது இந்திய கப்பல் கட்டும் தளத்தில் உள்நாட்டிலேயே கட்டப்பட்டு வருகின்றன.
இரண்டு ப்ராஜெக்ட் 1135.6 வரிசை போர்க்கப்பல்களைக் கட்டுவதற்கான ஒப்பந்தம் பாதுகாப்பு அமைச்சகத்துக்கும் கோவா ஷிப்யார்ட் லிமிடெட் நிறுவனத்துக்கும் இடையே 25 ஜனவரி 2019 அன்று கையெழுத்தானது.
முதல் கப்பல் 'டிரிபுட்' 23 ஜூலை 2024 அன்று அறிமுகம் செய்யப்பட்டது. இந்த கப்பல்கள் தரை, கடலுக்கு அடியில், வான்வழி போர் நடவடிக்கைகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளன.
'திரிபுத்', 'தவஸ்யா' ஆகியவை 124.8 மீட்டர் நீளமும் 15.2 மீட்டர் அகலமும் கொண்டவை. 'திரிபுத்', 'தவாஸ்யா' ஆகியவை உள்நாட்டு மூல உபகரணங்கள், ஆயுதங்கள், சென்சார்களில் அதிக சதவீதத்தைக் கொண்டுள்ளன.
0 Comments