பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டத்தில், பீகாரில் பாட்னாவில் தொடங்கி சசாரம் (120.10 கிலோமீட்டர்) வரை பாட்னா – அர்ரா – சசாரம் இடையேயான நான்கு வழிச் சாலையை பசுமை மற்றும் பிரவுன் ஃபீல்ட் சாலையாக அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இத்திட்டம் ரூ.3,712.40 கோடி செலவில் ஹைபிரிட் முறையில் அமைக்கப்படும்.
தற்போது, சசாராம், அர்ரா, பாட்னா இடையேயான சாலையில் நடைபெற்று வரும் போக்குவரத்து மாநில நெடுஞ்சாலைகளைச் சார்ந்துள்ளது. இதன் காரணமாக அர்ரா நகரம் உட்பட பல்வேறு பகுதிகளில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
அர்ரா, கிராஹினி, பைரோ, பிக்ரம்கஞ்ச், மோகர், சசாராம் போன்ற இடங்களில் அதிகரித்து வரும் போக்குவரத்துக்கான தேவைகளைக் கருத்தில் கொண்டு அதனைப் பூர்த்தி செய்யும் வகையில், தற்போதுள்ள பிரவுன்ஃபீல்ட் நெடுஞ்சாலையின் 10.6 கி.மீ தொலைவிலான சாலைகளை மேம்படுத்துவதுடன் பசுமை நடைபாதையும் உருவாக்கப்படும்.
0 Comments