Recent Post

6/recent/ticker-posts

2024-25 மற்றும் 2025-26 ஆண்டுகளுக்கான அதிகரிக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டுடன் திருத்தப்பட்ட தேசிய கால்நடை இயக்கத்தை செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves implementation of revised National Livestock Mission with increased financial allocation for the years 2024-25 and 2025-26

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று கூடிய மத்திய அமைச்சரவை, கால்நடைத் துறையின் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக திருத்தியமைக்கப்பட்ட தேசிய கால்நடை இயக்கத்திற்கு( (ராஷ்ட்ரிய கோகுல் மிஷன்) ஒப்புதல் அளித்தது. 

2021-22 முதல் 2025-26 வரையிலான பதினைந்தாவது நிதிக்குழு  காலத்தின் போது, 1000 கோடி ரூபாய் கூடுதல் ஒதுக்கீட்டில், அதாவது 3400 கோடி ரூபாய் மொத்த ஒதுக்கீட்டில், இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகிறது. இதில் இரண்டு புதிய செயல்பாடுகள் சேர்க்கப்பட்டுள்ளன.

மொத்தம் 15,000 கிடேரிகளைக் கொண்ட 30 குடியிருப்பு வசதிகளை உருவாக்க செயலாக்க முகமைகளுக்கு கிடேரி வளர்ப்பு மையங்கள் அமைப்பதற்கான மூலதன செலவில் 35% ஒரு முறை வழங்குதல்

உயர் மரபுத் தன்மை கொண்ட கிடாரிகளை(கன்று ஈனாத இளம் பசு)வாங்குவதற்கு விவசாயிகளை ஊக்குவித்தல், பால் ஒன்றியங்கள் / நிதி நிறுவனங்கள் / வங்கிகளிடமிருந்து விவசாயிகள் வாங்கும் கடனுக்கு 3% வட்டி மானியம் வழங்குதல்.

திருத்தியமைக்கப்பட்ட தேசிய கால்நடை (ராஷ்ட்ரிய கோகுல்) இயக்கத்திற்கு 15-வது நிதிக்குழு சுழற்சியில் (2021-22 முதல் 2025-26 வரை) ₹3400 கோடி ஒதுக்கீட்டுடன் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel