திரிபுரா, கர்நாடகா மாநிலங்களில் உள்ள கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2024-25-ம் நிதியாண்டிற்கான பதினைந்தாவது நிதி ஆணைய மானியத்தின் இரண்டாவது தவணையை மத்திய அரசு விடுவித்துள்ளது.
இது உள்ளாட்சி நிர்வாகத்தை வலுப்படுத்தவும், கிராமப்புற வளர்ச்சியை மேம்படுத்தவும் உதவிடும். திரிபுராவில், அனைத்து வட்டார பஞ்சாயத்துகள், மாவட்ட பஞ்சாயத்துகள் மற்றும் பாரம்பரிய உள்ளாட்சி அமைப்புகளுடன் சேர்த்து, தகுதியான 589 கிராம பஞ்சாயத்துகளுக்கு பயனளிக்கும் வகையில், மத்திய அரசு 31.1259 கோடி ரூபாயை நிபந்தனையற்ற மானியத் தொகையாக (2-வது தவணை) ஒதுக்கீடு செய்துள்ளது.
கர்நாடகா மாநிலம் முழுவதிலும் உள்ள கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு உதிவிடும் வகையில் 5375 தகுதியான கிராம பஞ்சாயத்துகளுக்கு 404.9678 கோடி ரூபாயை நிபந்தனையற்ற மானியத் தொகையாக (இரண்டாவது தவணை) விடுவிக்கப்பட்டுள்ளது.
இந்த மானியங்கள் அரசியலமைப்பு சட்டத்தின் பதினோராவது அட்டவணையின் கீழ் உள்ள 29 அம்சங்களில் பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் வழங்கப்படுகின்றன.
இந்த மானியத் தொகையை கொண்டு, சம்பளம், நிர்வாகச் செலவுகள் நீங்கலாக வளர்ச்சிப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது.
0 Comments