''நுகர்வோர் விலைக் குறியீடு அடிப்படையிலான சில்லறை பணவீக்கம் 2024 ஜனவரியில் 4.26 சதவீதமாகவும், பிப்ரவரியில் 5.09 சதவீதமாகவும் இருந்தது.
2024 நவம்பருக்குப் பிறகு நுகர்வோர் விலைக் குறியீடு அடிப்படையிலான சில்லறை பணவீக்கம் ரிசர்வ் வங்கி அறிவித்த வரம்புக்குள் நீடித்து வருகிறது. நாட்டின் சில்லறை பணவீக்கம் 2 - 6 சதவீதத்திற்குள் இருக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ளது.
2025 ஜனவரியை ஒப்பிடும்போது பிப்ரவரி உணவுப் பணவீக்கத்தில் 222 புள்ளிகள் சரிந்தது. 2023 மே மாதத்தில் ஏற்பட்ட சரிவுக்குப் பிறகு இந்த அளவுக்கு உணவுப் பணவீக்கம் சரிவை சந்தித்துள்ளது.
ஓராண்டிலிருந்து மற்றொரு ஆண்டு வரை கணக்கிடப்படும் சில்லறை பணவீக்கத்தில் குறிப்பாக இஞ்சி (-35.81%), சீரகம் (-28.77%), தக்காளி (-28.51%), காலிஃபிளவர் (-21.19%), பூண்டு ((-20.32%) குறைந்த விலையில் இருந்தன.
மாறாக தேங்காய் எண்ணெய் (54.48%), தேங்காய் (41.61%), தங்கம் (35.56%), வெள்ளி (30.89%), வெங்காயம் (30.42%) விலை உயர்ந்து காணப்பட்டன.
நகர்ப்புற பணவீக்கம் ஜனவரியில் 3.87% ஆக இருந்த நிலையில் பிப்ரவரியில் 3.32% ஆக குறைந்துள்ளது. இதேபோன்று நகர்ப்புற உணவு பணவீக்கத்தில் 5.53 சதவீதத்தில் இருந்து 3.20 சதவீதமாக சரிந்துள்ளது.
இதேபோன்று கிராமப் பகுதிகளில் ஜனவரியில் 4.59% ஆக இருந்த உணவு பணவீக்கம் பிப்ரவரியில் 3.79% ஆகக் குறைந்துள்ளது. குறைந்த பணவீக்கம் கொண்ட மாநிலமாக தெலங்கானா (1.13%) உள்ளது. அதிக பணவீக்கம் கொண்ட மாநிலமாக கேரளம் (7.31%) உள்ளது.
0 Comments