சாம்பியன் டிராபி கோப்பையின் இறுதிப்போட்டி நேற்று மார்ச் 9ம் தேதி ஞாயிற்றுக்கிழமை துபாயில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்யத் தேர்ந்தெடுத்த கிவீஸ் அணி, மைக்கேல் பிரேஸ்வெல் மற்றும் டேரில் மிட்செல் ஆகியோரின் அரைசதங்களால் 251/7 ரன்கள் எடுத்தது.
252 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்கியது. இறுதியில் 49 ஓவர்களில் இலக்கை எட்டி இந்திய அணி நியூசிலாந்தை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம், இந்திய அணி 3-வது முறையாக சாம்பியன்ஸ் டிராபியை வென்றது.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இதற்கு முன்னதாக, இந்திய அணி கடந்த 2002 ஆம் ஆண்டு (இலங்கை அணியுடன் இணைந்து) மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.
ஐசிசி இறுதி ஆட்டத்தில் ரோஹித், கோலி 9-ஆவது முறை பங்கேற்றனா். இந்த கிரிக்கெட் வரலாற்றில் எந்த வீரரும் செய்யாத சாதனை ஆகும். யுவராஜ் சிங் 8 ஐசிசி இறுதி ஆட்டங்களல் ஆடியிருந்தாா்.
0 Comments