Recent Post

6/recent/ticker-posts

2025 பிப்ரவரியில் முக்கிய துறைகளின் வளர்ச்சி சரிவு / Growth of key sectors declines in February 2025

2025 பிப்ரவரியில் முக்கிய துறைகளின் வளர்ச்சி சரிவு / Growth of key sectors declines in February 2025

மொத்தமுள்ள 8 முக்கிய துறைகளில் பல துறைகளின் வளர்ச்சி கடந்த பிப்ரவரியில் பின்னடைவை சந்தித்துள்ளது. நிலக்கரி 1.7) சதவீதம் (கடந்த ஆண்டு பிப்ரவரியில் 11.6%), சுத்திகரிப்பு 0.8 சதவீதம் (2.6%), ஸ்டீல் 5.6 சதவீதம் (9.4%), மின்சாரம் 2.8 (7.6%) சதவீதம் மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளன. 

கடந்த ஆண்டு பிப்ரவரியுடன் ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவு. உரம் 10.2 சதவீதம், சிமெண்ட் 10.5 சதவீதம் உற்பத்தி அதிகரித்துள்ளது. இந்த 8 துறைகளும் நடப்பு நிதியாண்டில் கடந்த ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான 11 மாதங்களில் 4.4 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளன. 

முந்தைய ஆண்டு இதே காலக்கட்டத்தில் இது 7.8 சதவீதமாக இருந்தது. இதற்கு முன்பு கடந்த ஆண்டு செப்டம்பரில் 2.4 சதவீத வளர்ச்சி அடைந்திருந்தது என ஒன்றிய அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel