உள்நாட்டு வருமானம் மற்றும் இறக்குமதியின் மூலம் கிடைத்த வருமானத்தின் அதிகரிப்பால், பிப்ரவரி மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் 10 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
பிப்ரவரி மாதத்தில் மத்திய ஜிஎஸ்டி ரூ. 35,204 கோடியாகவும், மாநில ஜிஎஸ்டி ரூ. 43,704 கோடியாகவும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ. 90,870 கோடியாகவும் மற்றும் கூடுதல் வரி ரூ. 13,868 கோடியாகவும் வசூலாகி உள்ளன.
இதன்மூலம், மொத்தம் ரூ. 1.84 லட்சம் கோடி வசூலாகி உள்ளது. கடந்தாண்டு இதே காலகட்டத்தில் ரூ. 1.68 லட்சம் கோடி வசூலான நிலையில், தற்போது ரூ. 1.84 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
0 Comments