2025 பிப்ரவரி மாதம் நடந்த போட்டிகளில் அவர்களின் செயல்பாட்டை வைத்து சிறந்த வீரரை தேர்வு செய்திருக்கிறது சர்வதேச கிரிக்கெட் வாரியம். மூன்று வீரர்கள் முதலில் சிறந்த வீரருக்கான பட்டியலில் முன்மொழியப்பட்டனர்.
இந்தியாவின் சுப்மன் கில், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் நியூசிலாந்தின் கிளென் பிலிப்ஸ் ஆகிய மூவரும் பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கான உத்தேச பட்டியலில் இடம் பிடித்தனர்.
பிப்ரவரி மாதம் 5 போட்டிகளில் விளையாடி 406 ரன்களை சேர்த்து இருக்கிறார். அவரது சராசரி 101.5 என்பதாக உள்ளது. இதை அடுத்து அவரது சிறந்த செயல்பாட்டுக்காக பிப்ரவரி மாதத்திற்கான ஐசிசி ஒருநாள் போட்டி சிறந்த வீரர் விருது அவருக்கு வழங்கப்பட்டது.
இதற்கு முன் 2023 ஆம் ஆண்டு ஜனவரி மற்றும் செப்டம்பரில் சுப்மன் கில் சிறந்த ஐசிசி ஒருநாள் போட்டி வீரருக்கான விருதுகளை வென்று இருக்கிறார். இந்த விருதை மூன்று முறை வென்ற முதல் வீரர் என்ற சாதனையையும் சுப்மன் கில் படைத்து இருக்கிறார்.
0 Comments