கடந்த அக்டோபர் 10-ம் தேதி தொடங்கிய 2024-2025 ரஞ்சிக்கோப்பை தொடரானது முடிவை எட்டியுள்ளது. விதர்பா கிரிக்கெட் அசோசியேசன் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் விதர்பா மற்றும் கேரளா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த விதர்பா அணி, டேனிஷ் மாலேவாரின் 153 ரன்கள் மற்றும் கருண் நாயரின் 86 ரன்கள் உதவியால் 379 ரன்களை குவித்தது.
கேரளா அணி முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெறும் வாய்ப்பை தவறவிட்டு 342 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. ரஞ்சிக்கோப்பை நாக்அவுட் விதிகளின் படி 5 நாட்கள் கொண்ட போட்டி சமனில் முடிந்தால் முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்ற அணி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டும்.
இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய விதர்பா அணி கருண் நாயரின் 135 ரன்கள் சதத்தால் 400 ரன்களுக்கு மேல் லீடிங் எடுத்தது. இந்த சூழலில் ஆட்டம் சமனில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.
முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றதால் விதர்பா அணி ரஞ்சிக்கோப்பை சாம்பியனாக மாறி சாதனை படைத்துள்ளது.
0 Comments