Recent Post

6/recent/ticker-posts

புதிய பிரவுன்ஃபீல்ட் அமோனியா – யூரியா வளாகம் நம்ரூப் 4 உரத் தொழிற்சாலை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves setting up of new brownfield ammonia-urea complex at Namrup 4 Fertilizer Factory

புதிய பிரவுன்ஃபீல்ட் அமோனியா – யூரியா வளாகம் நம்ரூப் 4 உரத் தொழிற்சாலை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves setting up of new brownfield ammonia-urea complex at Namrup 4 Fertilizer Factory

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை, அசாமில் உள்ள பிரம்மபுத்ரா பள்ளத்தாக்கு உரக் கழக வளாகத்தில் ரூபாய் 10,601.40 கோடி திட்ட மதிப்பீட்டில், ஆண்டுக்கு 12.7 லட்சம் மெட்ரிக் டன் யூரியா உற்பத்தித் திறன் கொண்ட புதிய பிரவுன்ஃபீல்ட் அமோனியா – யூரியா வளாகம் அமைப்பதற்கான முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. 

புதிய முதலீட்டுக் கொள்கை 2012-ன் கீழ் கடன் ஈவு பங்கு விகிதம் 70:30 என்ற விகிதத்தில் இது அமைக்கப்பட உள்ளது. நாம்ரூப்-4 திட்டத்தை செயல்படுத்துவதற்கான உத்தேச காலம் 48 மாதங்கள் ஆகும்.

அசாம் அரசு 40%, பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கு உரக் கழக நிறுவனம்: 11%, இந்துஸ்தான் உர்வாரக் & ரசாயன நிறுவனம் 13%, தேசிய உர நிறுவனம் 18%, இந்திய ஆயில் நிறுவனம் 18% என்ற விகிதத்தில் கடன் ஈவு பங்கு விகிதம் இருக்கும்.

இந்தத் திட்டம் உள்நாட்டில் குறிப்பாக வடகிழக்கு பகுதியில் யூரியா உற்பத்தித் திறனை அதிகரிக்கும். இது வடகிழக்கு, பீகார், மேற்கு வங்கம், கிழக்கு உத்தரப்பிரதேசம் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் அதிகரித்து வரும் யூரியா உரங்களின் தேவையை பூர்த்தி செய்யும். 

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel