தெலங்கானாவில் சாதிவாரி கணக்கெடுப்பை அம்மாநிலத்தின் திட்டமிடல் துறை கடந்த மாதம் மேற்கொண்டது. கணக்கெடுப்பின் முடிவில், தெலங்கானாவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அதிக எண்ணிக்கையில் இருப்பது தெரிய வந்தது.
மாநிலத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களின் எண்ணிக்கை 56.36 சதவிகிதம் இருப்பதாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், தெலுங்கானா பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இடஒதுக்கீடு மசோதா 2025 மற்றும் தெலுங்கானா பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் இடஒதுக்கீடு மசோதா 2025 ஆகியவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த மசோதாக்கள் மூலம் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு 29 சதவிகிதத்தில் இருந்து 42 சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், பட்டியலினத்தவர்களுக்கான இடஒதுக்கீடு 15 சதவிகிதத்தில் இருந்து 18 ஆகவும், பழங்குடியினவர்களுக்கான இடஒதுக்கீடு 6 சதவிகிதத்தில் இருந்து 10 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இதன்மூலம், கல்வி, வேலைவாய்ப்பு, உள்ளாட்சித் தேர்தல் உள்ளிட்டவற்றில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு அதிகரிக்கப்படும்.
0 Comments