பாதுகாப்பு அமைச்சகமானது நாக் ஏவுகணை அமைப்பு தடமறியும் வசதி கொண்ட பீரங்கி எதிர்ப்பு பிளாட் ஃபார்ம்கள் வாங்குவதற்கு கவச வாகனங்கள் நிகாம் லிமிடெட்டுடனும் ஆயுதப்படைகளுக்கு சுமார் 5,000 இலகுரக வாகனங்களைக் கொள்முதல் செய்வதற்காக ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம், & மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் ஆகியவற்றுடனும் சுமார் 2,500 கோடி ரூபாய் மதிப்பிலான கொள்முதல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு, தயாரிக்கப்பட்ட ஆயுதங்களை கொள்முதல் செய்வதற்கான பிரிவின் கீழ் இந்த ஒப்பந்தங்கள் மார்ச் 27-ம் தேதி புதுதில்லியில் பாதுகாப்புச் செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில் கையெழுத்தானது.
மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் உருவாக்கிய நாக் ஏவுகணை அமைப்பு தடமறியும் வசதி கொண்ட பீரங்கி எதிர்ப்பு பிளாட் ஃபார்ம்கள் அமைப்பை 1,801.34 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கொள்முதல் செய்வதற்கு இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது.
பாதுகாப்பு படையை நவீனமயமாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது பாதுகாப்பு படையின் செயல்பாட்டு தயார்நிலையை மேம்படுத்த உதவுகிறது. நாக் ஏவுகணை அமைப்பு தடம் அறியும் பீரங்கி எதிர்ப்பு என்பது அதிநவீன டாங்க் எதிர்ப்பு ஆயுத அமைப்பாகும்.
0 Comments