பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில், இந்திய ராணுவத்தை நவீனமயமாக்கும் வகையில் முன்மொழியப்பட்ட ரூ.54,000 கோடி மதிப்பிலான கொள்முதல் திட்டங்களுக்கு நேற்று (20.03.25) ஒப்புதல் அளித்துள்ளது.
அதன்படி, இந்திய ராணுவத்தில் உள்ள டி-90 பீஷ்மா டாங்கிகளுக்கு, தற்போதுள்ள 1000 ஹெச்பி என்ஜினை மேம்படுத்தும் வகையில் 1,350 ஹெச்பி என்ஜின் வாங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இது, சக்திக்கும் எடைக்கும் இடையிலான விகிதத்தை அதிகரிப்பதன் மூலம், இந்த டாங்கிகள் போர்க்களத்தில் தனது இயக்கத்தை, குறிப்பாக உயரமான பகுதிகளில் மேம்படுத்தும்.
0 Comments