59TH JNANPITH AWARD
59-வது ஞானபீட விருது
TAMIL
59TH JNANPITH AWARD / 59வது ஞானபீட விருது: பாரதிய ஞானபீட ஆய்வு மற்றும் வரலாற்று அமைப்பு கடந்த 1944-ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. இந்த அமைப்பு சார்பில் ஞானபீட விருது வழங்கப்பட்டு வருகிறது. இது இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருதாக கருதப்படுகிறது.
கடந்த 1965-ம் ஆண்டில் கேரளாவை சேர்ந்த சங்கர குருப் என்பவருக்கு முதல் ஞான பீட விருது வழங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக 59-வது ஞான பீட விருதுக்கு உரியவரை தேர்வு செய்ய பாரதிய ஞானபீட ஆய்வு அமைப்பின் உயர்நிலைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.
இந்த கூட்டத்துக்கு ஞான பீட விருது பெற்ற பிரதிபா ரே தலைமை வகித்தார். பல்வேறு மொழிகளை சேர்ந்த 8 அறிஞர்களும் கூட்டத்தில் பங்கேற்றனர்.
கூட்டத்தில் நடத்தப்பட்ட நீண்ட ஆய்வுக்குப் பிறகு சத்தீஸ்கரை சேர்ந்த இந்தி எழுத்தாளர் வினோத் குமார் சுக்லா (88) தேர்வு செய்யப்பட்டார். சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து இந்த விருதை பெறும் முதல் எழுத்தாளர் என்ற பெருமையை அவர் பெறுகிறார்.
கடந்த 1937-ம் ஆண்டு சத்தீஸ்கரின் ராஜ்நந்தகாவுன் நகரில் வினோத் குமார் சுக்லா பிறந்தார். சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் இந்தியில் பல்வேறு கதைகள், கவிதைகளை எழுதி வருகிறார். இவரது சில நாவல்களை தழுவி பாலிவுட் திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டு உள்ளன.
சாகித்ய அகாடமி உட்பட பல்வேறு விருதுகளை வினோத்குமார் பெற்றுள்ளார். தற்போது அவர் நாட்டின் மிக உயரிய இலக்கிய விருதான ஞான பீட விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
ENGLISH
59TH JNANPITH AWARD: The Bharatiya Jnanpith Research and History Society was established in 1944. The Jnanpith Award is awarded by this organization. It is considered the highest literary award in India.
In 1965, the first Jnanpith Award was awarded to Shankara Kurup from Kerala. Following this, a high-level meeting of the Bharatiya Jnanpith Research Society was held in Delhi yesterday to select the winner of the 59th Jnanpith Award.
Pratibha Ray, a Jnanpith Awardee, presided over the meeting. 8 scholars from different languages also participated in the meeting. After a long study conducted in the meeting, Hindi writer Vinod Kumar Shukla (88) from Chhattisgarh was selected. He is the first writer from the state of Chhattisgarh to receive this award.
Vinod Kumar Shukla was born in 1937 in Rajnandgaon, Chhattisgarh. He has been writing various stories and poems in Hindi for more than 50 years. Some of his novels have been adapted into Bollywood films.
Vinod Kumar has received various awards, including the Sahitya Akademi. He has currently been selected for the Jnanpith Award, the country's highest literary award.
0 Comments