Recent Post

6/recent/ticker-posts

ACHIEVEMENTS OF AGRICULTURAL SECTOR FROM 2021 TO 2025 / வேளாண் துறையில் 2021 - 2025 சாதனைகள்

ACHIEVEMENTS OF AGRICULTURAL SECTOR FROM 2021 TO 2025
வேளாண் துறையில் 2021 - 2025 சாதனைகள்

ACHIEVEMENTS OF AGRICULTURAL SECTOR FROM 2021 TO 2025 / வேளாண் துறையில் 2021 - 2025 சாதனைகள்

TAMIL

ACHIEVEMENTS OF AGRICULTURAL SECTOR FROM 2021 TO 2025 / வேளாண் துறையில் 2021 - 2025 சாதனைகள்: தமிழக வேளாண் பட்ஜெட் 2025 – 2026-ஐ அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்து வருகிறார். வேளாண் பட்ஜெட்டை 5வது முறையாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேரவையில் தாக்கல் செய்கிறார்.

இந்த பட்ஜெட் உரையின் போது அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உள்ளிட்ட திமுக அமைச்சர்கள் , எம்எல்ஏக்கள் என அனைவரும் பச்சை துண்டு அணிந்து இருந்தனர். இந்த பட்ஜெட் உரையின் தொடக்கத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கடந்த 4 ஆண்டுகால சாதனைகளை பட்டியலிட்டார்.

அதில், 2019 – 2020 வரையில் 146.77 லட்சம் ஏக்கராக இருந்த வேளாண் நிலங்கள் 2023 – 2024 காலகட்டத்தில் 151 லட்சம் ஏக்கராக உயர்ந்துள்ளது.

பல்வேறு வேளாண் வளர்ச்சி திட்டங்களால் பயிர் உற்பத்தி மற்றும் கேழ்வரகு உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.

மக்காச்சோளம், எண்ணெய் வித்துக்கள், கரும்பு ஆகியவை உற்பத்தியில் தமிழ்நாடு 2ஆம் இடத்தில் உள்ளது.

நிலக்கடலை, குறுந்தானியம் ஆகியவை உற்பத்தியில் தமிழ்நாடு 3வது இடத்திலும் உள்ளது.

2022 – 2023-இல் 346.38 லட்சம் மெட்ரிக் டன் நெல் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

நீர்பானசத்தை அதிகப்படுத்த விவசாயிகளுக்கு புதிய பாசன மின் இணைப்புகளை அரசு ஏற்படுத்தியுள்ளது. 2021 – 2022 காலகட்டத்தில் 1.81 லட்சம் பாசன மின் இணைப்புகள் வழங்ப்பட்டுள்ளது.

வேளாண் துறையில்இயந்திரங்கள் இன்றியமையாதது என்பதால் கடந்த 4 ஆண்டுகளில் 55 ஆயிரம் விவசாயிகள் பயண்பெரும் வகையில், 1109 இயந்திர வாடகை மையங்கள், 308 கருப்பு அறுவடை இயந்திரங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதற்காக ரூ.510 கோடி செலவில் நிதி ஒதுக்கீடு செய்ப்பட்டுள்ளது.

அறுவடைக்கு பிறகு லாபம் ஈட்டிட ரூ.488 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடங்கள், சேமிப்பு கிடங்குகள் கட்டப்பட்டுள்ளன.

2021 – 2022ஆம் ஆண்டு முதல் வேளாண் முதல் பட்டதாரிகளை ஊக்குவிக்கும் வகையில் அவர்களை வேளாண் தொழில் முனைவோராக்கும் திட்டத்தில் 435 இளைஞர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதியஉதவி அளிக்கப்பட்டு பல இளைஞர்களை தொழில் முனைவோர்களாக மாற்றியுள்ளோம்.

10,187 கிராம ஊராட்சிகளை ஒன்றிணைத்து 46 ஆயிரம் ஏக்கர் தரிசு நிலங்கள் விவசாய பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

வேளாண் துறையில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் பயன்பெறும் வகையில் ரூ.66.12 கோடி நிதி ஒதுக்கீடு செய்ப்பட்டுள்ளது. இதில் 15,800 பேர் பலன் பெற்றுள்ளனர்.

நுண்ணுயிர் பாசனம் மூலம் டெல்டா மாவட்டத்தில் சி மற்றும் டி பிரிவு வாய்க்கால் தூர்வாரியதால் நிலத்தடி நீர் மட்டம் செறிவூட்டப்பட்டது.

89 லட்சம் ஏக்கராக இருந்த கரும்பு உற்பத்தி ஏக்கர், 2023 – 2024 காலகட்டத்தில் 94.68 லட்சம் ஏக்கராக உயர்ந்துள்ளது. 4 ஆண்டுகளில் இதுவரை கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையாக ரூ.848 கோடி வழங்கப்பட்டுள்ளது.

இயற்கை பேரிடர்களால் ஏற்பட்ட பயிர் சேதங்களை தவிர்க்க தோட்டக்கலை நிவாரணமாக ரூ.1,631.53 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 20.84 லட்சம் உழவர்களு வழங்கபட்டுள்ளது. ரூ.5,242 கோடி ரூபாய் உழவர்களுக்கு நிதியுதவியாக வழங்கப்பட்டுள்ளது.

தற்போதைய ஆட்சி காலத்தில் வேளாண் துறையில் ஏற்படுத்தப்பட்ட சாதனைகளை 13.3.2025 அன்று வெளியிடப்பட்ட தமிழ்நாடு வேளாண் நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ENGLISH

ACHIEVEMENTS OF AGRICULTURAL SECTOR FROM 2021 TO 2025: Minister MRK Panneerselvam is presenting the Tamil Nadu Agriculture Budget 2025-2026 in the Legislative Assembly today. Minister MRK Panneerselvam is presenting the Agriculture Budget in the Assembly for the 5th time.

During this budget speech, all DMK ministers and MLAs, including Minister MRK Panneerselvam, were wearing green cloths. At the beginning of this budget speech, Minister MRK Panneerselvam listed the achievements of the last 4 years.

In it, the agricultural land, which was 146.77 lakh acres in 2019-2020, has increased to 151 lakh acres in 2023-2024.

Due to various agricultural development projects, Tamil Nadu is at the top in crop production and production of kelp.

Tamil Nadu is at the 2nd place in the production of maize, oilseeds, and sugarcane.

Tamil Nadu is also ranked 3rd in the production of groundnut and short grain rice.

346.38 lakh metric tons of paddy were produced in 2022-2023.

The government has provided new irrigation power connections to farmers to increase water availability. 1.81 lakh irrigation power connections were provided during 2021-2022.

Since machinery is essential in the agricultural sector, 1109 machinery rental centers and 308 black harvesting machines have been arranged in the last 4 years to reach 55 thousand farmers. A budget of Rs. 510 crore has been allocated for this.

New buildings and storage warehouses have been constructed at an estimated cost of Rs. 488 crore to generate profit after harvest.

From 2021-2022, in order to encourage first-time graduates in agriculture to become agricultural entrepreneurs, 435 youths have been provided financial assistance of Rs. 1 lakh each, and many youths have been turned into entrepreneurs.

46 thousand acres of fallow lands have been brought into agricultural use by merging 10,187 village panchayats.

Rs. 66.12 crore has been allocated for the benefit of Adi Dravidians and tribals in the agriculture sector. Out of this, 15,800 people have benefited.

The groundwater level has been enriched by the desilting of C and D section canals in the Delta district through microbial irrigation.

Sugarcane production acres, which were 89 lakh acres, have increased to 94.68 lakh acres in the period 2023-2024. In 4 years, Rs. 848 crore has been provided as incentives to sugarcane farmers so far.

A sum of Rs. 1,631.53 crore has been allocated as horticultural relief to prevent crop damage caused by natural calamities. 20.84 lakh farmers have been provided assistance. Rs. 5,242 crore has been provided as financial assistance to farmers.

The achievements made in the agriculture sector during the current regime have been mentioned in the Tamil Nadu Agriculture Budget Report published on 13.3.2025.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel