இந்திய ரிசர்வ் வங்கியின் செயல் நிர்வாக இயக்குநராக இந்திரானில் பட்டாச்சார்யா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனமானது மார்ச் 19 முதல் அமலுக்கு வந்துள்ளது.
இவர் பொருளாதார மற்றும் கொள்கை ஆராய்ச்சித் துறையை கவனித்துக் கொள்வார் என்று ரிசர்வ் வங்கி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அமலாக்கத் துறை அதிகாரியாக பதவி உயர்வு பெறுவதற்கு முன்பு, இந்திரானில் பட்டாச்சார்யா ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைத் துறையில் ஆலோசகராக பணியாற்றி உள்ளார்.
கத்தார் மத்திய வங்கியின் ஆளுநரின் தொழில்நுட்ப அலுவலகத்தில் பொருளாதார நிபுணராகவும் 5 ஆண்டுகள் (2009-14) பணியாற்றியுள்ளார்.
பட்டாச்சார்யா, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முதுகலை பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments