Recent Post

6/recent/ticker-posts

மத்திய ஹோமியோபதி ஆராய்ச்சிக் குழுமம் மற்றும் அடமாஸ் பல்கலைக்கழகம் ஆகியன ஹோமியோபதி ஆராய்ச்சியை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் / Central Homoeopathic Research Council and Adamas University sign MoU to promote Homoeopathic research

மத்திய ஹோமியோபதி ஆராய்ச்சிக் குழுமம் மற்றும் அடமாஸ் பல்கலைக்கழகம் ஆகியன ஹோமியோபதி ஆராய்ச்சியை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் / Central Homoeopathic Research Council and Adamas University sign MoU to promote Homoeopathic research

புதுதில்லி மத்திய ஹோமியோபதி ஆராய்ச்சிக் குழுமம் மற்றும் கொல்கத்தாவின் அடமாஸ் பல்கலைக்கழகம் ஆகியவை ஹோமியோபதி துறையில் கல்வி மற்றும் ஆராய்ச்சி ஒத்துழைப்பை வளர்ப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

நோபல் பரிசு பெற்ற சர் கிரிகோரி பால் வின்டர் மற்றும் கொல்கத்தாவின் அடமாஸ் பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர் சமித் ரே ஆகியோர் முன்னிலையில், மத்திய ஹோமியோபதி ஆராய்ச்சிக் குழுமத் தலைமை இயக்குநர் டாக்டர் சுபாஷ் கௌசிக் மற்றும் அடமாஸ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் சுரஞ்சன் தாஸ் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் 2025 மார்ச் 1-ம் தேதி கையெழுத்திட்டனர்.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் பல்துறை ஆராய்ச்சியில் குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது.

மாற்று மருத்துவத்தில் புதுமை கண்டுபிடிப்புகள் மற்றும் ஆதாரங்கள் அடிப்படையிலான ஆராய்ச்சியை மேம்படுத்துவதில் இரு நிறுவனங்களின் பகிரப்பட்ட உறுதிப்பாட்டையும் இது பிரதிபலிக்கிறது.

இந்த கூட்டாண்மையானது கல்வி உறவுகளை வலுப்படுத்தி, கூட்டு ஆராய்ச்சி திட்டங்களுக்கு உதவுவதோடு, ஹோமியோபதியைப் பரவலாக மக்கள் ஏற்றுக்கொள்வதற்கும், முக்கிய சுகாதார சேவையில் ஒருங்கிணைப்பதற்கும் பங்களிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel