முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (மார்ச் 27) தலைமைச் செயலகத்தில், பொதுப்பணித் துறை சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள 8 தொகுதிகள் கொண்ட கட்டுமானப் பணிகளுக்கான தரவு விவரப் புத்தகங்களை வெளியிட்டார்.
தமிழ்நாட்டில் கட்டுமானம் மற்றும் பொறியியல் பணிகள் பல்வேறு துறைகள் மூலம் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு துறையிலும் அத்துறைக்கு ஏற்ப பணிகளை மேற்கொள்ள ஏதுவாக துறைவாரியாக தரவு விவரப் புத்தகங்கள் தனித்தனியாக பயன்பாட்டில் உள்ளது.
இக்குழு பலமுறை கூடி விரிவான விவாதங்களுக்குப் பிறகு, தொகுதி – 1 பொதுப்பணித்துறை, தொகுதி-2 பொதுப்பணித் துறை மற்றும் இந்து சமய மற்றும் அறநிலையத்துறை, தொகுதி-3 நெடுஞ்சாலைத்துறை மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், தொகுதி 4, 5, 6, 7 & 8 - சென்னை பெருநகர குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரியம் ஆகிய 8 தொகுதிகள் கொண்ட கட்டுமானப் பணிகளுக்கான தரவு விவரப் புத்தகங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது.
0 Comments