விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல் குளத்தில் 3ம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 20 குழிகள் தோண்டப்பட்டதில் பணிகள் முழுமையாக முடிந்த 7 குழிகளில் அளவிடும் பணிகள் முடிக்கப்பட்டு குழிகளை மூடும் பணியில் தொழிலார்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
18 குழிகளில் சுடுமண் முத்திரைகள், சுடுமண்ணால் செய்யப்பட்ட விளையாட்டு பொருட்கள், சுடுமண்ணால் செய்யப்பட்ட சமையல் பாத்திரங்கள், சுடுமண் விளக்குகள், தங்க அணிகலன், சூது பவளமணி உட்பட 3,800க்கும் மேற்பட்ட பொருள்கள் கிடைத்துள்ளன.
சமீபத்தில் சுடுமண்ணால் ஆன காதணி, சங்கு வளையல், கண்ணாடி மணிகள், சுடுமண்ணால் ஆன பைக் கோன் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டது.
0 Comments