நாட்டின் பாதுகாப்பு திறன்களை உள்நாட்டு மூலவளங்களால் வலுப்படுத்துவதற்கான அரசின் முயற்சிகளின் ஒரு பகுதியாக, ரூ.2,906 கோடி செலவில் குறைந்த அளவிலான இடம் பெயர்த்து கொண்டு செல்லக் கூடிய ரேடாரை (அஸ்வினி) கொள்முதல் செய்வதற்காக பாதுகாப்பு அமைச்சகம் காஜியாபாத்தில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (பிஇஎல்) உடன் மூலதன கொள்முதல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இந்த ரேடார் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் மின்னணு மற்றும் ரேடார் வடிவமைப்பு பிரிவால் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டதாகும்.
இதற்கான ஒப்பந்தம் 2025, மார்ச் 12, அன்று புதுதில்லியில் பாதுகாப்புச் செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில் கையெழுத்தானது.
இந்த ரேடார், அதிவேக போர் விமானங்கள் முதல் ஆளில்லா வான்வழி வாகனங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் போன்ற மெதுவாக நகரும் இலக்குகள் வரை வான்வழி ஏவப்படும் இலக்குகளைக் கண்காணிக்கும் திறன் கொண்டது. இதன் மூலம் இந்திய விமானப்படையின் செயல்திறன் அதிகரிக்கும்.
0 Comments