கூட்டுறவுத் துறையின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்வதற்கான உயர்நிலைக் கூட்டம் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்றது.
இத்துறையில் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் வாயிலாக மாற்றத்தைக் கொண்டுவரும் கூட்டுறவுத் துறை மூலம் வளம் என்ற நடைமுறையை ஊக்குவிக்கவும் அத்துறையில், இளைஞர்கள், பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்கான திட்டங்கள் குறித்தும் மத்திய கூட்டுறவு அமைச்சகம் மேற்கொண்டு வரும் பல்வேறு முயற்சிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
நாட்டின் கூட்டுறவுத் துறையை விரிவுபடுத்த உலக அளவிலான கூட்டுறவு அமைப்புகளுடன் கூட்டாண்மை தேவை என்று வலியுறுத்திய பிரதமர், கூட்டுறவு அமைப்புகள் மூலம் இயற்கை வேளாண் பொருட்களை ஊக்குவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
ஏற்றுமதி சந்தைகளில் கவனம் செலுத்தவும், வேளாண் நடைமுறைகளை மேம்படுத்த கூட்டுறவு அமைப்புகள் மூலம் மண் பரிசோதனை மாதிரியை உருவாக்கவும் அவர் பரிந்துரைத்தார்.
நிதி பரிவர்த்தனைகளை எளிதாக்க ரூபே வேளாண் கடன் அட்டைகளுடன் யுபிஐ அமைப்பை ஒருங்கிணைக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய பிரதமர், கூட்டுறவு அமைப்புகளுக்கு இடையே ஆரோக்கியமான போட்டியின் அவசியத்தையும் எடுத்துரைத்தார்.
0 Comments