HIGHEST OBESTIY AFFECTED COUNTRIES IN WORLD
உலக அதிக உடல் எடை அவதியால் பாதிக்கப்படும் நாடுகளின் பட்டியல்
TAMIL
HIGHEST OBESITY AFFECTED COUNTRIES IN WORLD / உலக அதிக உடல் எடை அவதியால் பாதிக்கப்படும் நாடுகளின் பட்டியல்: இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழக (ஐசிஎம்ஆர்) ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழுவால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வறிக்கையின் முடிவுகள் ‘தி லேன்செட்’ இதழில் வெளியிடப்பட்டுள்ளன.
கடந்த 2021-ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்திய மக்கள்தொகையில் 25 வயதுக்கு மேற்பட்ட ஆண்களில் 81 மில்லியன் (8.10 கோடி) மற்றும் பெண்களில் 98 மில்லியன் (9.8 கோடி) பேர் அதிக உடல் எடையால் அவதிப்பட்டனர் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், புதிய ஆய்வின்படி, 2050-இல் இந்தியாவில் 218 மில்லியன் (21.80 கோடி) ஆண்களும், 231 (23.10 கோடி) பெண்களும் அதீத உடல் எடையால் அவதியுறுவர் என்று கூறப்படுகிறது.
இதன்மூலம், உலகளவில் அதிக உடல் எடையால் அவதியுறுவோரின் புகலிடமாக, சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா மாறும் அபாயமும் உள்ளது. இந்த பட்டியலில் சீனா, இந்தியாவுக்கு அதற்கடுத்தடுத்த இடங்களில், அமெரிக்கா, பிரேஸில், நைஜீரியா உள்ளன.
கடந்த 2021-ஆம் ஆண்டு நிலவரப்படி, உலக மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் அதாவது, 25 வயதுக்கு மேற்பட்ட சுமார் ஒரு பில்லியன் ஆண்களும் ஒரு பில்லியனுக்கும் மேற்பட்ட பெண்களும் அதிக உடல் எடையால் அவதிப்பட்டனர்.
இந்த நிலையில், 2050-இல் இந்த எண்ணிக்கையானது உலகளவில் சுமார் 3.8 பில்லியன் ஆக உயரக்கூடும். அதில் ஆண்கள் - 1.8 பில்லியன் (180 கோடி) மற்றும் பெண்கள் - 1.9 பில்லியன் (190 கோடி) எண்ணிக்கை ஆனது.
சீனா, இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் அதிக மக்கள்தொகை கொண்டிருப்பதால் அதிக உடல் எடையால் அவதியுறும் மக்கள்தொகையும் கணிசமாக அதிகரிப்பதாகக் கூறப்படுகிறது.
ஆனால், ஆப்பிரிக்காவின் சஹாரா பாலைவனப் பகுதிகளை உள்ளடக்கிய நாடுகளில் மக்களிடையே உடல் எடை அதிகரிப்பு விகிதம் 254.8 சதவிகிதம் அதிகரிக்கக்கூடும் என்று எச்சரிக்கிறது இந்த ஆய்வு.
ENGLISH
HIGHEST OBESITY AFFECTED COUNTRIES IN WORLD: The results of the study conducted by an international team of researchers in collaboration with researchers from the Indian Council of Medical Research (ICMR) have been published in the journal ‘The Lancet’.
As of 2021, it has been estimated that 81 million (81 million) men and 98 million (98 million) women in the Indian population above the age of 25 were overweight. In this situation, according to a new study, it is said that by 2050, 218 million (218 million) men and 231 million (231 million) women in India will be overweight.
With this, there is a risk that India will become the second largest obesity hotspot in the world, after China. The countries that follow China and India in this list are the United States, Brazil, and Nigeria.
As of 2021, more than half of the world's population, about one billion men and more than one billion women over the age of 25, were overweight.
In this situation, this number could increase to about 3.8 billion worldwide by 2050. Of which, 1.8 billion (1.8 billion) were men and 1.9 billion (1.9 billion) were women.
China, India, and the United States are said to have a significant increase in the number of people suffering from overweight. However, the study warns that the rate of weight gain among people in countries including the Sahara desert regions of Africa could increase by 254.8 percent.
0 Comments