பிரதமர் நரேந்திர மோடியின் புதிய தனிச் செயலாளராக இந்திய வெளியுறவுப் பணி (IFS) அதிகாரி நிதி திவாரி நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சரவையின் நியமனக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட இந்த நியமனம், பணியாளர் மற்றும் பயிற்சித் துறையால் (DoPT) இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, மார்ச் 29 தேதியிட்ட உத்தரவின்படி, திவாரி தனது தற்போதைய பதவியில் இருந்து பிரதமர் அலுவலகத்தில் புதிய பொறுப்புகளை ஏற்றுக்கொள்வார்.
அவரது பதவிக்காலம் தற்போதைய நிர்வாகத்தின் காலத்துடன் அல்லது மேலும் உத்தரவுகள் வழங்கப்படும் வரை இணைக்கப்பட்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடிக்கு ஏற்கெனவே விவேக் குமார் மற்றும் ஹார்திக் சதீஷ்சந்திர ஷா என இரண்டு தனிச் செயலாளர்கள் உள்ளனர்.
0 Comments