Recent Post

6/recent/ticker-posts

KALAIGNAR ELUTHUKOL AWARD 2023 / 2023ஆம் ஆண்டிற்கான கலைஞர் எழுதுகோல் விருது

KALAIGNAR ELUTHUKOL AWARD 2023
2023ஆம் ஆண்டிற்கான கலைஞர் எழுதுகோல் விருது

KALAIGNAR ELUTHUKOL AWARD 2023 / 2023ஆம் ஆண்டிற்கான கலைஞர் எழுதுகோல் விருது

TAMIL

KALAIGNAR ELUTHUKOL AWARD 2023 / 2023ஆம் ஆண்டிற்கான கலைஞர் எழுதுகோல் விருது: இதழியல் துறையில் சமூக மேம்பாட்டிற்காகவும், விளிம்பு நிலை மக்களின் மேம்பாட்டிற்காகவும் பங்காற்றி வரும் சிறந்த இதழியலாளர் ஒருவருக்கு ஆண்டுதோறும் ‘கலைஞர் எழுதுகோல் விருது’ மற்றும் ரூ.5 இலட்சம் பரிசுத் தொகையுடன் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும் என்று 2021-22 ஆம் ஆண்டிற்கான செய்தி மக்கள் தொடர்புத் துறையின் மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பினைச் செயல்படுத்தும் வகையில், கடந்த 2021-ஆம் ஆண்டிற்கான ‘கலைஞர் எழுதுகோல் விருது’ மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதனுக்கும், 2022-ஆம் ஆண்டிற்கான ‘கலைஞர் எழுதுகோல் விருது’ மூத்த பத்திரிகையாளர் வி.என்.சாமிக்கும் முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கிச் சிறப்பித்தார்.

அந்த வகையில் 2023-ஆம் ஆண்டிற்கான ‘கலைஞர் எழுதுகோல் விருது’, நக்கீரன் எனும் பெயரில் புலனாய்வு இதழினைத் தொடங்கி பல ஆண்டுகளாகப் பல்வேறு பாராட்டுகளைப் பெற்று வெற்றிகரமாக இதழினை நடத்திவரும் நக்கீரன் ரா. கோபாலுக்கு வழங்கிடவும்; கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு பெண்மையைப் போற்றும் வகையில் சிறப்பினமாகப், பல்வேறு தொலைக்காட்சி நிறுவனங்களில் 18 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி நிறைந்த அனுபவம் பெற்றுள்ள சுகிதா சாரங்கராஜுக்கு வழங்கிட முதலல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, சென்னை தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், 2023-ஆம் ஆண்டிற்கான கலைஞர் எழுதுகோல் விருதுகளை நக்கீரன் இரா.கோபாலுக்கும், முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டினை முன்னிட்டு பெண்மையைப் போற்றும் வகையில் சிறப்பினமாக சுகிதா சாரங்கராஜுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி சிறப்பித்தார்.

இந்த விருது ரூ.5 லட்சத்துக்கான பரிசுத் தொகை, பாராட்டுச் சான்றிதழ் அடங்கியது.

ENGLISH

KALAIGNAR ELUTHUKOL AWARD 2023: It was announced in the grant request of the Department of Public Relations for the year 2021-22 that an outstanding journalist who has contributed to social development and the upliftment of the marginalized people in the field of journalism will be awarded the ‘Kalaignar Eluthukol Award’ annually along with a prize money of Rs. 5 lakh and a certificate of appreciation.

In order to implement this announcement, Chief Minister M.K. Stalin presented the ‘Kalaignar Eluthukol Award’ for the year 2021 to senior journalist I. Shanmuganathan and the ‘Kalaignar Eluthukol Award’ for the year 2022 to senior journalist V.N. Swamy.

In that regard, the ‘Artist Pen Award’ for the year 2023 will be presented to Nakkheeran Ra. Gopal, who started an investigative magazine named Nakkheeran and has been running the magazine successfully for many years, receiving various accolades; On the occasion of the centenary of the artist, Chief Minister M.K. Stalin had ordered to present the Kalaignar Eluthukol Awards for the year 2023 to Nakkheeran I. Gopal and the Kalaignar Eluthukol Awards for the year 2023 to Sukhita Sarangaraj, who has worked in various television companies for more than 18 years, in a special way to appreciate women on the occasion of the centenary of the artist.

Accordingly, at a function held at the Chennai Secretariat on Thursday, Chief Minister M.K. Stalin presented the Kalaignar Eluthukol Awards for the year 2023 to Nakkheeran I. Gopal and the Kalaignar Eluthukol Awards for the year 2023 to Sukhita Sarangaraj, who has worked in various television companies for more than 18 years, in a special way to appreciate women on the occasion of the centenary of the artist. The award included a prize money of Rs. 5 lakhs and a certificate of appreciation.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel