ஹாா்வா்டு பல்கலைக்கழகம் (அமெரிக்கா), ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகம் (பிரிட்டன்) ஆகியவற்றில் பட்டப்படிப்புகளை முடித்த மாா்க் காா்னி, அமெரிக்காவின் கோல்ட்மன் சாஷ்ஸ் நிறுவனத்தில் 13 ஆண்டுகள் பணியாற்றினாா்.
பின்னா் கனடா நாட்டின் மத்திய வங்கியான பேங்க் ஆஃப் கனடாவில் துணை ஆளுநராக 2003-ஆம் ஆண்டில் பொறுப்பேற்ற அவருக்கு, ஓராண்டு கழித்து கனடா அரசின் நிதியமைச்சகத்தில் முதுநிலை துணை இணையமைச்சா் என்ற நியமனப் பொறுப்பு வழங்கப்பட்டது.
பல்வேறு பொறுப்புகளை வகித்துவந்த அவா், 2024-ஆம் ஆண்டில் கனடாவின் பொருளாதார வளா்ச்சிக்கான திட்டக் குழுவின் தலைவராக பிரதமா் ட்ரூடோவால் நியமிக்கப்பட்டாா்.
0 Comments