நாட்டின் பாதுகாப்புப் பணியாளர்களின் மனநலனை மேம்படுத்துவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, ஆயுதப்படை மருத்துவ சேவைகள் அமைப்பு மற்றும் பெங்களூரூவில் உள்ள தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனம் ஆயுதப் படைகளின் மனநலத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட கூட்டு ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்காக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஆயுதப்படை மருத்துவ சேவைகளின் தலைமை இயக்குநர் சர்ஜன் வைஸ் அட்மிரல் ஆர்த்தி சரின், தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் பிரதிமா மூர்த்தி ஆகியோர் கையெழுத்திட்டனர்.
இந்த இரு அமைப்புகளுக்கும் இடையேயான ஒத்துழைப்பு, மனநலச் சேவைகளை வலுப்படுத்துதல், மருத்துவப் பணியாளர்களுக்குச் சிறப்புப் பயிற்சி அளித்தல், படைவீரர்கள், மாலுமிகள், விமானப்படை வீரர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் அவர்களைச் சார்ந்திருப்பவர்கள் எதிர்கொள்ளும் மனநலப் பிரச்சனைகளைக் கையாள்வதற்கான புதுமையான திட்டங்களை உருவாக்குதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும்.
0 Comments