Recent Post

6/recent/ticker-posts

ஆபரேஷன் பிரம்மா / OPERATION BRAHMA

ஆபரேஷன் பிரம்மா / OPERATION BRAHMA

மியான்மரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ள மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் வெள்ளிக்கிழமை (மார்ச் 28) ஏற்பட்டது. மியான்மர் மட்டுமல்லாது தாய்லாந்து, வியட்நாம், சீனாவிலும் உணரப்பட்ட நில அதிர்வுகளால் மேற்கண்ட நாடுகளில் பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. அப்பகுதிகளில் மீட்பு பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தால் பலத்த சேதத்தை சந்தித்துள்ள மியான்மருக்கு 'ஆபரேசன் பிரம்மா' என்கிற பெயரில் நிவாரணப் பொருள்கள் அனுப்பப்படுகின்றன. அந்த வகையில், இந்தியா சார்பில் 15 டன் நிவாரணப் பொருள்கள் அனுப்பப்பட்டுள்ளன.

உத்தரப் பிரதேச மாநிலம் ஹிண்டன் விமான நிலையத்தில் இருந்து இந்திய விமானப்படையின் (IAF C 130J) விமானத்தில் அனுப்பப்பட்ட நிவாரணப் பொருள்கள் மியான்மர் சென்றடைந்தன.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel