Recent Post

6/recent/ticker-posts

OSCAR AWARDS 2025 / ஆஸ்கர் விருதுகள் 2025

OSCAR AWARDS 2025 / ஆஸ்கர் விருதுகள் 2025

OSCAR AWARDS 2025 / ஆஸ்கர் விருதுகள் 2025

TAMIL

OSCAR AWARDS 2025 / ஆஸ்கர் விருதுகள் 2025: 97வது ஆஸ்கர் விருதுகள் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் டால்பி அரங்கில் இன்று கோலகலமாக நடைபெற்றது. கடந்தாண்டு வெளியான சிறந்த படங்களுக்கு 23 பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆஸ்கர் விருது பரிந்துரைப் பட்டியலில் அதிகபட்சமாக 13 பிரிவுகளில் ஸ்பானிஷ் திரைப்படமான எமிலியா பெரெஸ் (EMILIA PEREZ) நாமினேட் செய்யப்பட்டுருந்தது. ஆங்கிலம் அல்லாத ஒரு வெளிநாட்டுத் திரைப்படம் இத்தனைப் பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டிருப்பது இதுவே முதல்முறை.

இதற்கு அடுத்ததாக தி ப்ரூட்டலிஸ்ட் (THE BRUTALIST), விக்கட் (WICKED) என்கிற ஆங்கிலத் திரைப்படங்கள் தலா 10 பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டன.

கான்கிளேவ் (CONCLAVE) மற்றும் எ கம்ப்ளீட் அன்னோன் (A COMPLETE UNKNOWN) திரைப்படங்கள் தலா 9 பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டிருந்தன.

இந்தியா சார்பில் `சிறந்த குறும்படம்' பிரிவில் பிரியங்கா சோப்ரா மற்றும் குனீத் மோங்கா தயாரித்த `அனுஜா' என்கிற குறும்படம் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.

97வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில் வென்ற திரைப்படங்களின் முழுப் பட்டியல்

  • சிறந்த நடிகர் - ஏட்ரியன் ப்ரோடி (தி ப்ரூட்டலிஸ்ட்)
  • சிறந்த நடிகை - மிகே மேடிசன் (அனோரா)
  • சிறந்த திரைப்படம் - அனோரா
  • சிறந்த இயக்குநர் - சேன் பேக்கர் (அனோரா)
  • சிறந்த திரைக்கதை - சேன் பேக்கர் (அனோரா)
  • சிறந்த படத்தொகுப்பு - சேன் பேக்கர் (அனோரா)
  • சிறந்த ஒளிப்பதிவு - லோல் க்ராலி (தி ப்ரூட்டலிஸ்ட்)
  • சிறந்த துணை நடிகர் - கியேரன் கல்கின் (எ ரியல் பெய்ன்)
  • சிறந்த துணை நடிகை - சோய் சல்டானா (எமிலியா பெரெஸ்)
  • சிறந்த பாடல் - எல் மால் (எமிலியா பெரெஸ்)
  • சிறந்த பிண்ணனி இசை - டேனியல் ப்ளம்பெர்க் (தி ப்ரூட்டலிஸ்ட்)
  • சிறந்த ஆவணப்படம் - நோ அதர் லேண்ட்
  • சிறந்த ஆவணக் குறும்படம் - தி ஒன்லி கேர்ள் இன் தி ஆர்கெஸ்ட்ரா
  • சிறந்த சர்வதேச திரைப்படம் - ஐயம் ஸ்டில் ஹியர் (பிரேசில்)
  • சிறந்த அனிமேசன் திரைப்படம் - ஃப்ளோ
  • சிறந்த அனிமேசன் குறும்படம் - இன் தி ஷேடோ ஆஃப் சைப்ரஸ்
  • சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு - விக்கட்
  • சிறந்த ஒலி வடிவமைப்பு - ட்யூன் 2
  • சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் - ட்யூன் 2
  • சிறந்த திரைக்கதை (தழுவல்) - பீட்டர் ஷ்ட்ராகன் (கான்கிளேவ்)
  • சிறந்த குறும்படம் (லைவ் ஆக்ஷன்) - ஐயம் நாட் எ ரோபாட்
  • சிறந்த ஒப்பனை - தி சப்ஸ்டன்ஸ்
  • சிறந்த ஆடை வடிவமைப்பு - பால் டேஸ்வெல் (விக்கட்)
  • இதில், அதிகபட்சமாக அனோரா திரைப்படம் 5 விருதுகளை வென்றுள்ளது. இயக்குநர் சேன் பேக்கர் 4 விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளார். இதுவே ஒரு படத்திற்கு இயக்குநர் வென்ற அதிகபட்ச விருதுகளாகும்.
  • இதற்கு அடுத்ததாக, தி ப்ரூட்டலிஸ்ட் திரைப்படம் 5 விருதுகளையும் ட்யூன் 2, எமிலியா பெரேஸ், விக்கட் ஆகிய படங்கள் தலா 2 விருதுகளையும் வென்றுள்ளன.

ENGLISH

OSCAR AWARDS 2025: The 97th Academy Awards were held today at the Dolby Theatre in Los Angeles, USA. Awards were given to the best films released last year in 23 categories.

The Spanish film EMILIA PEREZ was nominated in the maximum number of categories in this Oscar nomination list, 13 categories. This is the first time that a foreign film not in English has been nominated in so many categories.

Next to this, the English films THE BRUTALIST and WICKED were nominated in 10 categories each. The films CONCLAVE and A COMPLETE UNKNOWN were nominated in 9 categories each.

The short film ``Anuja'' produced by Priyanka Chopra and Guneed Monga was nominated in the ``Best Short Film'' category on behalf of India.

Full list of winners at the 97th Academy Awards

  • Best Actor - Adrien Brody (The Brutalist)
  • Best Actress - Mikael Madison (Anora)
  • Best Picture - Anora
  • Best Director - Shane Baker (Anora)
  • Best Screenplay - Shane Baker (Anora)
  • Best Film Editing - Shane Baker (Anora)
  • Best Cinematography - Lol Crawley (The Brutalist)
  • Best Supporting Actor - Kieran Culkin (A Real Pain)
  • Best Supporting Actress - Zoe Saldana (Emilia Perez)
  • Best Song - El Mal (Emilia Perez)
  • Best Original Score - Danielle Blumberg (The Brutalist)
  • Best Documentary - No Other Land
  • Best Documentary Short Film - The Only Girl in the Orchestra
  • Best International Feature Film - I'm Still Here (Brazil)
  • Best Animated Feature Film - Flow
  • Best Animated Short Film - In the Shadow of Cypress
  • Best Production Design - Wicked
  • Best Sound Design - Tune 2
  • Best Visual Effects - Tune 2
  • Best Screenplay (Adapted) - Peter Strachan (Conclave)
  • Best Short Film (Live Action) - I'm Not a Robot
  • Best Makeup - The Substance
  • Best Costume Design - Paul Tazewell (Wicked)
  • Of these, Anora has won the most awards with 5. Director Shane Baker holds the record with 4 awards, the most awards won by a director for a film. Next to this, The Brutalist won 5 awards, while Tune 2, Emilia Perez, and Wicked won 2 awards each.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel