சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் திரு ராமசாமி சக்திவேல், திரு பி.தனபால், திரு சின்னசாமி குமரப்பன், திரு கந்தசாமி ராஜசேகர் ஆகியோரை சென்னை உயர்நீதிமன்ற நிரந்தர நீதிபதிகளாகவும், மும்பை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் திரு சைலேஷ் பிரமோத் பிராமே, திரு ஃபிர்தோஷ் பிரோஸ் பூனிவாலா, திரு ஜிதேந்திர சாந்திலால் ஜெயின், ஆகியோர் மும்பை உயர்நீதிமன்ற நிரந்தர நீதிபதிகளாகவும் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திருமதி மஞ்சுஷா அஜய் தேஷ்பாண்டேவை 12.08.2025 முதல் ஓராண்டு காலத்திற்கு கூடுதல் நீதிபதியாகக் குடியரசுத்தலைவர் நியமித்துள்ளார்
0 Comments