குஜராத் மாநிலம் நவ்சாரியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (08.03.2025) தொடங்கி வைத்தார். பெண்களுக்கு அதிகாரமளித்தல் என்பது அரசால் மேற்கொள்ளப்படும் பணிகளில் ஒரு மைல்கல்லாக உள்ளது.
பிரதமரின் தொலைநோக்குப் பார்வையின் வழிகாட்டுதலின்படி, அவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியை நோக்கிய நடவடிக்கைகளை எடுக்க அரசு உறுதிபூண்டுள்ளது.
இதையொட்டி, மார்ச் 8 அன்று, சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, நவ்சாரி மாவட்டம் வன்சி போர்சி கிராமத்தில் நடைபெற்ற லட்சாதிபதி சகோதரிகள் நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்று, லட்சாதிபதி சகோதரிகளுடன் கலந்துரையாடினார். 5 லட்சாதிபதி சகோதரிகளுக்கு சான்றிதழ்களையும் அவர் வழங்கினார்.
கிராமப்புற வாழ்வாதாரத்திற்கு உகந்த சூழலை உருவாக்குவதற்காக செயல்படும் புத்தொழில் நிறுவனங்களுக்கு ஜி-மைத்ரி திட்டம், நிதி உதவி, வழிகாட்டுதல் ஆதரவு ஆகியவற்றை வழங்கும்.
குஜராத்தின் இரண்டு முன்னேற விரும்பும் மாவட்டங்கள், 13 முன்னேற விரும்பும் வட்டங்களில் உள்ள அந்தியோதயா குடும்பங்களைச் சேர்ந்த சுய உதவிக் குழு பெண்களுக்கு நிதி உதவி, தொழில் முனைவோர் பயிற்சி ஆகியவற்றை ஜி-சஃபல் திட்டம் வழங்கும்.
0 Comments