மத்திய அரசு சமீபத்தில் வக்ஃப் வாரிய சட்ட திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தது. இந்நிலையில், தமிழக சட்டசபையில் அந்த மசோதாவை கைவிட வேண்டும் என்று அரசினர் தீர்மானத்தை கொண்டுவர முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளார்.
இந்த நிலையில், வக்ஃப் திருத்த மசோதாவுக்கு எதிரான தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் கொண்டு வந்து முன்மொழிந்தார். இதனைத் தொடர்ந்து, இந்த தீர்மானத்தின் மீது விவாதம் நடந்தது.
அப்போது சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்தனர். வக்ஃப் தீர்மானத்திற்கு பா.ஜ.க மட்டும் எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் இருந்து வெளியேறியது. ஆனால், அ.தி.மு.க, பா.ம.க உள்ளிட்ட கட்சிகள் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்தன.
இதனையடுத்து, வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மானம் சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
0 Comments