SAHITYA AKADEMI AWARD 2025 FOR TAMIL TRANSLATION
சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி 2025
TAMIL
SAHITYA AKADEMI AWARD 2025 FOR TAMIL TRANSLATION / சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி 2025: ஆண்டுதோறும் சிறந்த படைப்பாளர்கள் மற்றும் இந்திய மொழிகளில் வெளிவரும் சிறந்த படைப்புகளை பிற இந்திய மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்வோருக்கும் கடந்த 1955-ம் ஆண்டு முதல் சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டு வருகிறது.
இலக்கியம் சார்ந்த விருதுகளில் இது உயரிய விருதாக பார்க்கப்படுகிறது. விருது பெறுவோருக்கு ரூ.1 லட்சம் ரொக்கம் மற்றும் கேடயம் வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டு சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருதுக்கு 21 மொழிகளில் இருந்து நூல்கள் தேர்வு செய்யப்பட்டன. மலையாள எழுத்தாளர் நளினி ஜமிலா எழுதிய 'என்ட ஆண்கள்' என்ற நூலை 'எனது ஆண்கள்' என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்த படைப்பாளர் பேராசிரியர் விமலா சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வாகியுள்ளார். 'எனது ஆண்கள்' நூல் சிறந்த மொழிபெயர்ப்பு நூலாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த விமலா, பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் தமிழ்த் துறை பேராசிரியையாக பணியாற்றுகிறார்.
மிகவும் எளிய பின்னணி கொண்ட விமலா, டெல்லியில் உள்ள ஜவர்கலால் நேரு பல்கலைக்கழகத்தில் தனது ஆராய்ச்சி படிப்பை பயின்றார். இதுவரை 4 நூல்களை மொழிபெயர்த்துள்ளார்.
ENGLISH
SAHITYA AKADEMI AWARD 2025 FOR TAMIL TRANSLATION: The Sahitya Akademi Award has been given annually since 1955 to outstanding writers and those who translate outstanding works published in Indian languages into other Indian languages.
This is considered the highest award in literary awards. The awardees are given a cash prize of Rs. 1 lakh and a shield. Books from 21 languages were selected for the Sahitya Akademi Award for Best Translation this year.
Professor Vimala, who translated the book 'Enta Aangal' written by Malayalam writer Nalini Jamila into Tamil under the title 'Enathu Aangal', has been selected for the Sahitya Akademi Award. The book 'Enathu Aangal' has also been selected as the best translated book.
Vimala, who hails from Kanyakumari district, works as a professor of Tamil at Thuya Saveriyar College in Palayankottai. Coming from a very humble background, Vimala did her research at Jawaharlal Nehru University in Delhi. He has translated 4 books so far.
0 Comments