திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு மகேந்திர கிரியில் உள்ள இஸ்ரோ திரவ உந்தும வளாகத்தில் நடைபெற்ற பவர் ஹெட் டெஸ்ட் ஆர்டிகள் செமி கிரையோஜனிக் என்ஜின் கட்டமைப்பின் முதல் வெப்ப சோதனை வெற்றிகரமாக நடைபெற்றுள்ளதாக இஸ்ரோ தகவல் அளித்துள்ளது.
2000 கிலோ நியூட்டன் என்ற அளவிலான வெப்ப சோதனையுடன் செமி கிரயோஜனிக் மேம்பாட்டு திட்டத்தில் இஸ்ரோ மிகப்பெரிய திருப்புமுனையை எட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது.
மேம்படுத்தப்பட்ட செமி கிரயோஜெனிக் என்ஜின் சோதனையில் சிறந்த செயல்திறன் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்ட என்ஜின் அமைப்புகள் என அனைத்தும் நம்பிக்கை அளிக்கும் வகையில் வெற்றி அடைந்துள்ளது.
0 Comments