Recent Post

6/recent/ticker-posts

SUSTAINABLE DEVELOPMENT GOAL (SDG) 16 INDEX 2023 - 2024 / நிலையான வளர்ச்சி இலக்கான (எஸ்டிஜி) 16 குறியீடு 2023 - 2024

SUSTAINABLE DEVELOPMENT GOAL (SDG) 16 INDEX 2023 - 2024
நிலையான வளர்ச்சி இலக்கான (எஸ்டிஜி) 16 குறியீடு 2023 - 2024

SUSTAINABLE DEVELOPMENT GOAL (SDG) 16 INDEX 2023 - 2024 / நிலையான வளர்ச்சி இலக்கான (எஸ்டிஜி) 16 குறியீடு 2023 - 2024

TAMIL

SUSTAINABLE DEVELOPMENT GOAL (SDG) 16 INDEX 2023 - 2024 / நிலையான வளர்ச்சி இலக்கான (எஸ்டிஜி) 16 குறியீடு 2023 - 2024: மத்திய அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பானது, மாநிலங்களோடு மாநிலங்களை ஒப்பிடும் வகையில், டூப்ளின் பல்கலைக்கழகத்தின் நிலையான மேம்பாட்டு அறிக்கை, நிதி ஆயோக் வெளியிட்ட நிலையான வளர்ச்சி இலக்கு குறியீடு 2023 - 24, தேசிய மக்கள்தொகை ஆணையத்தின் 2011-2036 மக்கள்தொகை கணிப்புகள் குறித்த தொழில்நுட்பக் குழு அறிக்கை ஆகியவற்றை ஒப்பிட்டு, ஒரு கலவையான ஒப்பீட்டுத்தரவை வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கையில், தமிழகம் 78 புள்ளிகளுடன் நாட்டிலேயே இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. ஒப்பீட்டளவில், முதலிடத்தில் இருக்கும் கேரளம் சிறிய மாநிலம் என்பதால், நாட்டில் மிக முக்கிய இடத்தை தமிழகம் பிடித்திருக்கிறது என்றே சொல்லலாம்.

சமூக, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் அம்சங்களை அடிப்படையாக வைத்து, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முன்னேற்றத்தை, நீதி ஆயோக்கின் நிலையான வளர்ச்சி இலக்கு குறியீடு மதிப்பிட்டுள்ளது.

இந்தியாவின் ஒட்டுமொத்த புள்ளிகள் 71 ஆக இருக்கும் நிலையில், தமிழகத்தின் குறியீடு 78 ஆக உள்ளது. கடந்த 2020 - 21ஆம் ஆண்டுக்கான நாட்டின் குறியீடு 66 ஆக இருந்த நிலையில், இது முன்னேற்றமாகக் கருதப்பட்டாலும், ஒட்டுமொத்தப் பட்டியலில் இந்தியா 109வது இடத்தையே பிடித்திருக்கிறது.

நிலையான வளர்ச்சி இலக்குகளில் 108 குறியீடுகளில் 19-ல் தமிழகம் பின்தங்கியிருக்கிறது. குறிப்பாக எஸ்டிஜி 5 (பாலின சமத்துவம்), எஸ்டிஜி 3 (ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு), எஸ்டிஜி 4 (தரமான கல்வி), மற்றும் எஸ்டிஜி 9 (தொழில், புத்தாக்கம், உள்கட்டமைப்பு) ஆகியவை தமிழகம் பின்தங்கியிருக்கும் ஒருசில குறியீடுகளாகும்.

எஸ்டிஜி 5 இல், தமிழகம் 50-64 புள்ளிகளைப் பெற்றுள்ளது, அதாவது, 1,000 ஆண்களுக்கு 929 பெண்கள் என்ற பாலின விகிதம் தேசிய தரவுடன் பொருந்துகிறது.

அதே வேளையில் எஸ்டிஜி 11 மற்றும் எஸ்டிஜி 15 ஆகியவை நகர்ப்புற சிக்கல்கள் மற்றும் பலவீனமான காடு வளர்ப்பு போன்றவற்றில் தேசிய சராசரியை விட தமிழகம் குறைவாகவே புள்ளிகளைப் பெற்றுள்ளது.

நாட்டில், பிகார் 57 புள்ளிகளுடன் கடைசி இடத்திலும் கேரளம், உத்தரகண்ட் 79 புள்ளிகளுடன் முதலிடத்திலும் உள்ளன. தமிழகம் 78 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

கேரளத்தை எடுத்துக்கொண்டால் எஸ்டிஜி 3 (ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு)-ல் 82 புள்ளிகளையும், எஸ்டிஜி 4 (தரமான கல்வி)-ல் 80 புள்ளிகளையும் பெற்றுள்ளது. அதுபோல பிகார் எஸ்டிஜி - 1ல் வெறும் 34 புள்ளிகளையும் இரண்டில் 40 புள்ளிகளையும் மட்டுமே பெற்றுள்ளது.

தமிழகம் 78 புள்ளிகளைப் பெற்றிருக்கும் நிலையில், உத்தரப் பிரதேசம் 64 புள்ளிகளையும் குஜராத் 67 புள்ளிகளையும் பெற்றிருப்பதன் மூலம், இவை 30 - 43 சதவீத குறியீடுகளில் 50க்கும் குறைவான புள்ளிகளைப் பெற்றிருப்பது தெரிய வருகிறது.

அதுபோல, தமிழகம் தரமான குடிநீரிலும் (எஸ்டிஜி6), காற்று மாசுபாடு (எஸ்டிஜி 11) போன்றவற்றிலும் பின்தங்கியிருப்பதையும் காட்டுகிறது.

இந்தியா எஸ்டிஜி 5-ல் (பாலின சமத்துவம்) பலவீனமாக உள்ளது. இதன் கீழ் இருக்கும் எட்டு அளவீடுகளிலும் இந்தியா வீழ்ச்சியை சந்தித்துள்ளது. நாட்டில் இன்னமும் 1000 ஆண்களுக்கு 929 பெண்கள் என்ற விகிதமே நீடிக்கிறது. 

திருமணமான பெண்களில் 29.2 சதவீதம் பேர் குடும்ப வன்முறையை எதிர்கொள்கிறார்கள், 13.96 சதவீதம் பெண்கள்தான் சொந்தமாக சொத்து வைத்திருக்கிறார்கள் என்று காட்டுகிறது.

மேலும், பெண்களுக்கு எதிராக ஊதிய சமநிலையின்மை, வேலை செய்யும் இடங்களில் பாகுபாடு நிலவுகிறது என்பதும், 54 சதவீத பெண்களுக்குத்தான் சொந்தமான செல்போன் இருக்கிறது என்பதும், 74 சதவீத பெண்கள் மட்டுமே குடும்பக் கட்டுப்பாட்டு முடிவை எடுக்கிறார்கள் என்றும் இந்த குறியீடு சுட்டிக்காட்டுகிறது.

அதுமட்டுமல்லாமல், நாட்டின் 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பாலின சமத்துவமின்மை நிலவுவதையும் குறிப்பிட்டுள்ளது.

ENGLISH

SUSTAINABLE DEVELOPMENT GOAL (SDG) 16 INDEX 2023 - 2024: The Central Science and Environment Agency has released a mixed comparative data comparing the Dublin University Sustainable Development Report, the Sustainable Development Goals Index 2023-24 published by NITI Aayog, and the National Population Commission's Technical Group Report on Population Projections 2011-2036, to compare states.

In this report, Tamil Nadu has ranked second in the country with 78 points. In comparison, Kerala, which is at the top, is a small state, so it can be said that Tamil Nadu has occupied the most important position in the country.

NITI Aayog's Sustainable Development Goals Index assesses the progress of states and union territories based on social, economic and environmental aspects.

While India's overall score is 71, Tamil Nadu's index is 78. While the country's index for the last year 2020-21 was 66, which is considered progress, India has ranked 109th in the overall list.

Tamil Nadu is lagging behind in 19 out of 108 indicators of the Sustainable Development Goals. In particular, SDG 5 (gender equality), SDG 3 (health and well-being), SDG 4 (quality education), and SDG 9 (employment, innovation, infrastructure) are some of the indicators where Tamil Nadu is lagging behind.

In SDG 5, Tamil Nadu has scored 50-64 points, meaning that the sex ratio of 929 females per 1,000 males is in line with the national average. Meanwhile, in SDG 11 and SDG 15, Tamil Nadu has scored lower than the national average in areas such as urban problems and weak forestation.

In the country, Bihar is at the bottom with 57 points, while Kerala and Uttarakhand are at the top with 79 points. Tamil Nadu is at the second place with 78 points.

Kerala, for example, scored 82 points in SDG 3 (health and well-being) and 80 points in SDG 4 (quality education). Similarly, Bihar scored just 34 points in SDG 1 and 40 points in both.

While Tamil Nadu scored 78 points, Uttar Pradesh scored 64 points and Gujarat scored 67 points, indicating that they scored less than 50 points in 30-43 percentile indicators. Similarly, Tamil Nadu also lags behind in quality drinking water (SDG 6) and air pollution (SDG 11).

India is weak in SDG 5 (gender equality). India has suffered a decline in all eight indicators under this. The ratio of girls to boys in the country still remains at 929. It shows that 29.2 percent of married women face domestic violence, 13.96 percent of women own their own property.

The index also indicates that there is wage inequality and discrimination against women in the workplace, only 54 percent of women own a mobile phone, and only 74 percent of women make family planning decisions. It also notes that gender inequality exists in 14 states and union territories of the country.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel