சிப்காட் பூங்காவில், கோத்ரேஜ் கன்ஸ்யூமர் ப்ராடக்ட் நிறுவனம் கட்டுமான பணிகள் 100% நிறைவடைந்து உற்பத்தி தொடங்குவதற்கு தயார் நிலையில் உள்ளது.
இதனைத் தொடர்ந்து இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கோத்ரேஜ் கன்ஸ்யூமர் ப்ராடக்ட் நிறுவனத்தின் உற்பத்தியை தொடங்கி வைத்தார்.
கோத்ரேஜ் கன்ஸ்யூமர் ப்ராடக்ட் தொழிற்சாலையில் சோப், வாசனைப் பொருட்கள், அழகு சாதன பொருட்கள் உள்ளிட்டவை தயாரிக்கப்பட உள்ளன.
குறிப்பாக இந்த தொழிற்சாலையில் பெண்களுக்கு அதிக அளவு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என, தமிழக அரசு சார்பில் நிறுவனத்திற்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்ற தொழிற்சாலை நிர்வாகம், ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பை உறுதி செய்துள்ளது.
0 Comments